என்னுசுரு தங்கச்சி
பூச்சூடி
பொட்டுவைச்சி
காளியாத்தா
பாதம் தொட்டு
பொறந்ந வீட்டை
விட்டுபுட்டு
புகுந்தவீடு போகும்
என்னுசுரு தங்கச்சியே
இந்த அண்ணன் நெனப்பை
மறந்துடாத என்னுசுரு
தங்கச்சியே...
உன் முகத்தை
பார்க்கலைனா
சோறு நீரு கொள்ளாது
தெனம் உன் குரலை
கேக்கலைனா எனக்கு
உறக்கம் கூட வராது
இந்த அண்ணன் நெனப்பை
மறந்துடாத
என்னுசுரு தங்கச்சியே...
ஆசைப்பட்டு தொட்டுபாத்த
பட்டு துணி ஒன்னுக்கு
துட்டு கொறஞ்சி போகவே
விட்டு வேற சீலை எடுத்தியே
என் மனசு ரணமாச்சு
இன்னும் அது ஆறலையே...
அப்பா இல்லை
ஆத்தா இல்லை
ரெண்டுமா நீ இருந்து
என்ன வளர்த்த என்னுசுரு
அண்ணனே
உன்னை மறந்தா
சுவாசிக்கும் காத்துகூட
கெட்டுபோகும் எனக்கு...