பொங்கல் நாளிதே புன்னகை பூத்திடும் பொன்னாள் - கலித்துறை

கலித்துறை
(மா கூவிளம் விளம் விளம் மா)

பொங்கல் நாளிதே புன்னகை பூத்திடும் பொன்னாள்;
திங்கள் போலவே தென்றலின் காற்றதன் மென்மை!
செங்கண் காண்கவே அரிசியைப் பானையி லிட்டுத்
திங்கள் போலவே தேசுடன் பொங்கிய சோறே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-25, 7:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே