நன்மதி வெண்பா - நூல் - பாடல் 80
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
செய்யவே வாக்கருமஞ் செய்யலுள்ளம் ஒவ்வாத
தையன் மணமரசன் றானறியாச் - செய்யபணி
வேண்டியழை யாவதுவை வீடுறலொவ் வாக்கேண்மை
ஈண்டாகா நன்மதி யே! 80