மகளின் திருமணம்
மகளின் திருமணம்
அன்னநடைநடந்து வந்த அழகிய பெட்டகம்
ஆடல் கலையினை கசடற கற்று அருமையாக
இன்னிசையோடு காலில் சதங்கையும் கையில் அபிநயமும் ஒரு சேர
ஈன்றவளையும் காண்போரையும் தனது முகபாவத்தால் சொக்கவைத்து
உள்ளோரையெல்லாம் கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து
ஊடகமும் ஊர்மக்களும் வியந்து பாராட்டுகள் வழங்கிட
என் கன்னிமயில் இன்று காரிகையாகி கனவுகளுடன் நிற்க
ஏற்ற காளை ஒருவனைக் கண்டு களிப்பெய்தி ஆசையுடன்
கண்கள் கலந்திட காதலித்துக் கைபிடித்து அன்புடன்
கன்னிமகள் கைபிடித்து நடைபயின்று வருவதைக் கண்டு
கண்கள் இரண்டும் குளமாகிட காலமெல்லாம் அவள்வாழ்க
என உள்மனம் நிறைந்து ஆசியளித்து வளமும் நலமும்
பெற்று பெருவாழ்வு வாழ வாயாரவாழ்த்தி மகிழ்வுடன்
திருமணமேடை விட்டு மெல்ல இறங்கி வீடு நோக்கி
நடந்தேன் களிப்பும் கலக்கமும் கலந்த ஒரு உணர்வுடனே!!