தனிமை

சத்தமில்லா பெருவெளியில்
இறைச்சியை கொத்தி தின்னும்
கழுகுகளைப்போல்
நச்சரித்துக்கொண்டிருக்கிறது...

திரும்பி வாராத கடன்

தேதி ஐந்துக்குள் குடிக்கூலி

எழுத நினைத்தும்
தொடங்கப்படாத கவிதை

ஒரே பொழுதில்
நூலகத்தையே
படித்து தீர்க்க வேண்டுமென்கிற
பைத்தியக்காரத்தனம்

தொலைபேசி செய்தும்
கொண்டு வரப்படாத தேநீர் ஞாபகம்

அணைந்து கிடைக்கும்
குழல்விளக்குகளை வெறித்தபடி
ஊர்ந்து கடக்கிற பொழுது

இப்படியாக அனைத்தும் ..

மின்சாரமில்லாத வெறுமையில்
ஆழமாகவே
மனதை துளையிட்டு செல்கிறது
தனிமை!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (23-Sep-16, 5:12 pm)
Tanglish : thanimai
பார்வை : 84

மேலே