இதயத்தில் நீ

மலரின்
வாசம்
போல்...

நிலவின்
அழகு
போல் ...

தென்றலின்
இதம்
போல் ...

இசையின்
இனிமை
போல்...

கவிதையின்
வரிகள்
போல்...

அன்னையின்
அன்பை
போல்...

மழலையின்
மொழியை
போல் ...

என்றும்
என்னுள்
நீ
வாழ்கிறாய்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (14-Aug-16, 1:01 am)
Tanglish : ithayathil nee
பார்வை : 384

மேலே