மயில் இறகு

கண் அழகின் வடிவம் கொண்டு இயற்கையின் கற்பனையை
வென்றுவிட்டாய் ..............!
காரியமான் திருமுடியில் காணாத காட்சி தந்தாய்...!
பெண் அழகே பேசிவிடும் பெருமையை பெற்றுவிட்டாய் ...!
தமிழ் வேந்தும் தவழ்ந்து செல்லும் ஆசனமாய் நின்றாயே....!
தரணியும் கவர்ந்திழுக்கும் தனி பெருமை பெற்றாயே......!
எழுத்துக்கள் வடிவமைக்க எழுதுகோல் ஆனாயே.......!
ஏற்றம் பெரும் மழலை நெஞ்சும் விளையாடும் உயிரினம் நீதானே....!
மென்மையை தந்து விடும் மெல் இசை உன் வடிவம் ....!
இங்கு மேதாவி இல்லையே உன் அழகை வர்ணிக்க ..!.......................மயிலிறகே ......!!!!!