பர்வதராஜன் மு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பர்வதராஜன் மு |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 66 |
ஒரே நொடி
ஒரே நிமிடம்
ஒரே மணி நேரம்
ஒரே நாள்
ஒரே மாதம்
ஒரே வருடம்
ஒரே ஜென்மம்
என்றாலும்
அது உன்னோடுவே வாழ
வரம் ஒன்று வேண்டும்...
அதிகாலையில் பூக்கள்
மேல் சிந்தி இருப்பது
பனி துளிகள் அல்ல...
அது!
அவைகளின்
கண்ணீர் துளிகள்
இன்னும் சில மணி நேரத்தில்
மரணம் என்பதின்
அடையாளம்...
காதலை சொல்ல
அழகான
வழி
மௌனம்!
உன் விழிகளும்
உன் இதழ்களும்
சொல்லி
புரியாத
காதலை
உன்
பிரிவில்
உணர்கிறேன்!
வாழ்க்கை முழுதும்
எனக்காய் வாழும்
உன் அன்பை பற்றி
கவி எழுத எனக்கு தோன்றவில்லையே!
தாய் அவள்
ஒரவிழிப்பார்வையிலே
எனை அறிமுகம்
செய்ய
எல்லையில்லா பேரானந்தம்
கொண்டாய் .....
அப்பா என்று
நான் அழைத்த முதல்
தருணத்தில்
அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தாய் ....
நான் எதை கேட்டாலும்
இல்லை என்று
சொல்லாமல்
செய்யும் குணம்
கடவுளையே மிஞ்சி
விட்டாய் அப்பா ....
பெண் பிள்ளையாய்
பிறந்ததற்கு
மகிழ்ச்சி
கொள்கிறேன்
எந்நாளும் நீ வெறுத்ததில்லை
அப்பா ....
மற்றுமொரு பிறவி
ஒன்றிருந்தால்
உன்னை கருவில்
சுமக்கும் வரமொன்று
வேண்டும் அப்பா ..
கொச்சைத்தமிழில்
பேசும் உலகில்
கொங்குத்தமிழில்
என்னை கொன்றவனே!
உன் சிரிப்பில்தான்
என்னத்தை ஒளித்து வைத்திருக்கிறாய்..!
மீண்டும் மீண்டும்
உன் முகத்தில்
அதையே தேடுகிறேன்..!
என்னை பார்க்கும் போதெல்லாம்
உன் முகத்தை சுருக்கி
என்னவோ செய்கிறாயே!
சிறு குழந்தையிடம்
என் முகம் எப்படினு
காட்டுனு சொன்னா
செய்துகாட்டுவது போல்..!
பலமுறை தவிக்க விடுகிறாய்..!
மறுமுறை மிதக்க விடுகிறாய்..!
கள்ளமில்லா பேச்சால்
கர்வம் தகர்த்துவிடுகிறாய்..!
ஒருநாள் நான்
சேலை கட்டியிருந்தேன்..!
நீ ஒருமுறைதான் பார்த்தாய்..!
என் உச்சி வரை கூசியது..!
ஆழமாய் ரசிக்கிறாய்..!
அழகாய் மு
காற்று
கொஞ்சம்
வீசவில்லை ....
அவள்
முகத்தில் பூத்தது
வெண் பூக்கள்
அவ்வளவு அழகு ....
அந்த பூக்களை
எல்லாம்
பறித்து கொண்டன
அவள் கைக் குட்டை ....
அவள் துவைத்து
நுரைத்து
போன கைக்குட்டையில்
ஆயிரம் பூக்கள்
பூத்தன .....
அன்று முதல்
விலையுயர்ந்த வாசனை
திரவியங்கள்
தாயாரிக்கும்
இடமாக மாறி போனது
அவள் வீட்டு
குளியலறை .....
அவள் கைக்குட்டை
காய வைத்த
கம்பியை
தொட்டு
போன காற்று
மோட்சம் பெற்று
சொர்க்கம் சென்றடைந்தது....
ஊனமுள்ளவன்
பல கலைகள்
கற்றிருந்தும்
ஏழை
மாணவனுக்கு
இலவச கல்வி
வழங்கிட
மனமில்லை
அவனிடத்தில்....
கோடிகளில்
பணமிருந்தும்
ஏழையின்
பசி போக்கிட
மனமில்லை
அவனிடத்தில்....
வசதிகள்
வாய்த்திருந்தும்
தானம் என்று
கேட்பவனுக்கு
உதவி செய்திட
மனமில்லை
அவனிடத்தில்.....
குறையில்லா
வாழ்விருந்தும்
மனிதனை
மனிதனாக
மதித்திடும்
மனமில்லை
அவனிடத்தில்....
குறையற்ற
பிறப்பிருந்தும்
கடவுள்
அனைத்தையும்
அளித்திருந்தும்
மனதளவில்
அவனும்
ஊனமுள்ளவனாய்.......!!
பிறப்பில் குறைகள் உள்ள மனிதன் ஊனமுள்ளவன் இல்லை.....நிறைகளிருந்தும் மனதளவில் ஊனம் கொண்டவனே ஊனமுள்ளவன்.
-சகி
நீ
ஓரக்கண்ணால்
பார்த்தாய்
கவிஞன்
ஆனேன் ...
நீ
என் பேரை
கூறினாய்
நானே
கவிதை
ஆனேன்...
விழுந்து விட்டேன் எழ
மனம் இல்லை
விழுந்தது
உன் இதயம்
இந்த பார்வை
இந்த புன்னகை
இவைகள் தான்
நீ இல்லை என்றாலும்
என்னை வாழவைக்கிறது
பேச வார்த்தைகள் இல்லை
முடிக்கவும் மனம் இல்லை
தவிப்பில் நான்