சொர்க்கம் சென்றடைந்த காற்று

காற்று
கொஞ்சம்
வீசவில்லை ....

அவள்
முகத்தில் பூத்தது
வெண் பூக்கள்
அவ்வளவு அழகு ....

அந்த பூக்களை
எல்லாம்
பறித்து கொண்டன
அவள் கைக் குட்டை ....

அவள் துவைத்து
நுரைத்து
போன கைக்குட்டையில்
ஆயிரம் பூக்கள்
பூத்தன .....

அன்று முதல்
விலையுயர்ந்த வாசனை
திரவியங்கள்
தாயாரிக்கும்
இடமாக மாறி போனது
அவள் வீட்டு
குளியலறை .....

அவள் கைக்குட்டை
காய வைத்த
கம்பியை
தொட்டு
போன காற்று
மோட்சம் பெற்று
சொர்க்கம் சென்றடைந்தது....

எழுதியவர் : கிரிஜா.தி (2-Sep-16, 8:15 pm)
பார்வை : 111

மேலே