இவன் எனக்கானவன்

கொச்சைத்தமிழில்
பேசும் உலகில்
கொங்குத்தமிழில்
என்னை கொன்றவனே!

உன் சிரிப்பில்தான்
என்னத்தை ஒளித்து வைத்திருக்கிறாய்..!
மீண்டும் மீண்டும்
உன் முகத்தில்
அதையே தேடுகிறேன்..!

என்னை பார்க்கும் போதெல்லாம்
உன் முகத்தை சுருக்கி
என்னவோ செய்கிறாயே!
சிறு குழந்தையிடம்
என் முகம் எப்படினு
காட்டுனு சொன்னா
செய்துகாட்டுவது போல்..!

பலமுறை தவிக்க விடுகிறாய்..!
மறுமுறை மிதக்க விடுகிறாய்..!
கள்ளமில்லா பேச்சால்
கர்வம் தகர்த்துவிடுகிறாய்..!

ஒருநாள் நான்
சேலை கட்டியிருந்தேன்..!
நீ ஒருமுறைதான் பார்த்தாய்..!
என் உச்சி வரை கூசியது..!

ஆழமாய் ரசிக்கிறாய்..!
அழகாய் முறைக்கிறாய்..!

ஓரக்கண்ணால் பார்த்தாலே
பின்னால் ஓடிவரும் ஆடவர் ஆயிரம்..!
ஆனால் நீ மட்டும்தான்
உன் கண்ணியத்தில்
என்னை தோற்கடித்துவிட்டாய்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (30-Aug-16, 5:34 pm)
Tanglish : ivan ENAKKANAVAN
பார்வை : 334

மேலே