தித்திக்கும் முத்தமிழே

தித்திக்கும் முத்தமிழே! திகட்டாத தீங்கனியே!
எத்திக்கும் புகழ்பெற்ற எம்மொழிக்கும் முன்மொழியே!
சித்தர்களின் சிந்தையிலும் சேர்ந்திருந்த செந்தமிழே!
மித்திரராய் மனதினிலே மாண்பளிக்கும் மதிமொழியே!
அறமுணர்த்தும் ஆசானே! அணையாத அகல்விளக்கே!
புறமென்றும் அகமென்றும் பண்பூட்டும் பொன்மொழியே!
பார்கொண்ட மொழியெல்லாம் பார்த்தேங்கும் பனிமொழியே!
வேர்விட்டு வளர்ந்துள்ள விண்முட்டும் வியன்மொழியே!
சிறப்பெல்லாம் சேர்ந்துள்ள சிந்தைநிறை சீர்மொழியே!
மறம்கொண்ட மன்னர்களின் மனம்வாழ்ந்த மணித்தமிழே!
கண்ணானக் கருத்தனைத்தும் கற்பிக்கும் கனிமொழியே!
மண்ணில்நீ மணக்கும் மலர்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (30-Aug-16, 6:04 pm)
பார்வை : 108

மேலே