கோடுகள்
என் எல்லைக்கோடுகளைத்
தீர்மானிப்பதில் தான்
எத்தனை ஆர்வம்
இந்த சமூகத்திற்கு?
என்னை சுற்றி,
பல அளவுகளில்
பல நிறங்களில்
பல திசைநோக்கி
பல கோடுகள்
இருப்பவை போதாதென்று
இன்னும் வரைய
எழுதுகோல் எடுக்க
போயிருக்கிறது
ஒரு கூட்டம்
கோடுகள் போடுவதால்
நீ இலக்குவனாகவும்
முடியாது
கோடுகளூக்குள்ளேயே
குடியிருப்பதால்,
இராவணன் வராமல்
இருக்கப் போவதும் கிடையாது
கோடுகளின் குவியல்களை
தாண்டி,
எனக்கான கோடுகளை
நானே வரைந்து
முன்னேறிக்கொண்டேயிருப்பேன்