கஜபதி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கஜபதி
இடம்:  Madurai
பிறந்த தேதி :  09-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2014
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  13

என் படைப்புகள்
கஜபதி செய்திகள்
கஜபதி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2017 7:34 am

கண்ணீா்த் துளியை
வெற்றுத் திரவம் என்று
தீா்மானித்து விட முடியவில்லை......

ஒரு கண்ணீா்த் துளியை
அளந்து பாா்த்தேன்
பிரபஞ்சத்தை விடப்
பொியதாக இருந்தது
பிளந்து பாா்த்தேன்
பூகம்பத்தை விட
பேரதிா்வாக இருந்தது
நிறுத்துப் பாா்த்தேன்
பேரண்டத்தைவிடவும்
எடைகூடியதாகவே இருந்தது
உடைத்துப் பாா்த்தேன்
உள்ளே உயிா் இருந்தது
நுகா்ந்து பாா்த்தேன்
அடிமை வாசனை இருந்தது
சுவைத்துப் பாா்த்தேன்
அமிலத்தின் அவஸ்தை இருந்தது
உற்றுப் பாா்த்தேன்
உருகும் மெழுகுவா்த்தியின்
மென்மை இருந்தது
தீண்டிப் பாா்த்தேன்
கொந்தளிக்கும் எாிமலைக்
குழம்பின் குமிழ்கள் இருந்தன
ஒளியுடனும் அனலுடனும் .......

வெற்றுத் தி

மேலும்

கண்ணீர் துளியில் வலிகல் இருப்பதை உனர்ந்தேன் மிக அருமை வாழ்த்துக்கள் 22-May-2017 10:53 pm
படைப்பு போற்றுதற்குரியது பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் ----------------------------------------- வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுத்துகிறது. ‘கொஞ்ச நேரத்தில் நிறைய விஷயங்களை கண்ணீரால் வெளிப்படுத்த முடிகிறது’ 21-May-2017 5:18 am
எழுதிய காகிதம் கூட கண்ணீர் சிந்தும் ..... உணர்வில் தமிழின் புலமை கலந்தது அருமை ... 09-May-2017 4:17 pm
நல்ல படைப்பு அருமை 08-May-2017 10:49 am
கஜபதி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2017 11:12 pm

அருகில் இல்லாமல் தூரத்தில்,
ஒரு கிராமம்...

கிராமத்துக்கும் கிராமத்துக்கும்...
சில மைல் தூரம்...

இரண்டையும் இணைப்பது,
ஒத்தயடிப் பாதை...

இன்று...
அனாதையாகக் கிடக்கிறது...
யாரோ...
போட்டுவிட்டு சென்றதுபோல்...!

ஒருகாலத்தில்...

பள்ளிக்கும் அந்தப்பாதை...!
சந்தைக்கும் அந்தப்பாதை...!
நல்லதுக்கும் அந்தப்பாதை...!
கெட்டதுக்கும் அந்தப்பாதை...!

இன்று...
நடக்க ஆளில்ல...!!

பாதையின் வழியில்,
இரண்டு காடு...!!

ஒன்று விவசாயக்காடு,
மற்றொன்று சுடுகாடு...!!!

ஊர் பெருசுங்க,
இளசுகளை பாத்துச் சொல்லுச்சாம்...

ஐயா...!
நாங்கதான் இந்த வெயில்ல,
காடு கரையின்னு கஷ்ட்டப்படுறோம்...!

மேலும்

உணர்வின் விளிம்பில் அனைவரும்... 07-Apr-2017 1:32 pm
உண்மையை உணர்த்தும் கண்ணீர் சிந்தும் பசுமையின் மொழிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Apr-2017 11:39 am
எதார்த்தம் 07-Apr-2017 9:46 am
கஜபதி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2017 2:28 am

=====================
எங்கே எனது கவிதை...
அதிகாலை பள்ளிக்கூடத்திற்குச் செல்ல
அடம்பிடித்து அழுகின்ற குழந்தையைப்போல்
அழகான வெள்ளைத் தாளில் வந்து
உட்கார அடம்பிடிக்கிறதே .. எங்கே எனது கவிதை

பருவத்து எழிலை எல்லாம் பதுக்கிவைத்து
பார்ப்போரை வசீகரிக்கும்
பஞ்சவர்ணக்கிளியைப் பற்றியதாகவோ

பசிக்காக அழுகின்றக் குழந்தைக்கு
பாலூட்டப் பாய்விரிக்கும்
பரிதாபக்காரியைப் பற்றியதாகவோ

உழைப்பாளர் படுகின்ற துயரத்தின் வடுக்களின்
உள்சென்று உட்கார்ந்து அதுசொல்லும்
உற்காயம் பற்றியதாகவோ

உழைக்காமல் உட்கார்ந்து ஊரார் உழைப்பை
உறிஞ்சிக் குடிக்கின்ற உதவாக்கரைகளின்
உப்பிய உடம்பைப் பற்றியத

மேலும்

நல்ல படைப்பு ...தொடரட்டும் தோழரே வாழ்த்துக்கள் 07-Apr-2017 9:43 am
ஏக்கத்தில் தோட்டத்தில் கவிதை எனும் மலர்களுக்கு பஞ்சமில்லை 07-Apr-2017 2:12 am
தங்கள் ஓவியம் கண்டு ஆனந்தம் இளமைக் காலத்தில் நான் எழுதிய ஸ்வான் பேனா போல் அழகாக உள்ளது தங்க நிற நிப்பு . மலரும் நினைவுகள் நிறைய எழுதுங்கள் 06-Apr-2017 11:56 am
நன்றி 06-Apr-2017 9:38 am
கஜபதி - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2017 2:51 pm

அன்புக்காதலனுக்கு,

அகத்தினை வடித்திட நானும் அயராது தேடுகிறேன்
அகராதியிலும் அகப்படவில்லை வார்த்தைகள்..!!

அங்குமிங்குமாய் எழுத்துக்களை இழுத்துப்பிடித்து
எழுதுகிறேன் இக்கடிதம்..!!

ஆசை நாயகனே..!!

நீளும் ஆசைகளில் உன் நீங்கா நினைவுகள்
நாளும் வளர்ந்து வந்து என்னை தேளாய் கொட்டுகிறது..!

கொஞ்சி விளையாடி குறும்பு செய்தே உன்னை வென்றிட வேண்டுமென்று
வஞ்சியெனக்கு வாலும் வளர்ந்துகொண்டிருக்கிறது..!

நின் முத்தங்களை சுமந்துவந்த முத்திரைத்தாளெல்லாம்
என் மூச்சுக்காற்றில் வாடுகிறது..!

நாணம் விடுத்து நானும் உன் மீசை கடித்தே
என் ஆசை தீர்க்க அனுமதி கேட்கிறேன்..!

அஞ்சனம் தீட்டிய

மேலும்

வருகையாலும், கருத்தாலும் மனம் மகிழ்கிறேன் சகோ.. மிக்க நன்றி.. 11-Apr-2017 1:12 pm
மாற்றிவிடுகிறேன் ஐயா.. தங்களின் வருகையாலும், வாழ்த்தாலும் மகிழ்கிறேன்.. என் மனமார்ந்த நன்றிகள்.. 11-Apr-2017 1:12 pm
எதுகை மோனை பொலிந்துவர இலக்கிய இனிமையுடன் எழுதிய அழகிய ஆசைக் கடிதம் .இதைப் படிக்கும் போது வாலியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது . அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கடிதம் . மிகப் பிடித்த சில வரிகள் : நீளும் ஆசைகளில் உன் நீங்கா நினைவுகள் நாளும் வளர்ந்து வந்து என்னை தேளாய் கொட்டுகிறது..! அஞ்சனம் தீட்டிய விழிகளும் அஞ்சலகம் தேடியே அலைகிறது..!! தனிமை துரத்தும் வேளை தபால் நிலையத்திலே தஞ்சம் புகுந்து விடுகிறேன்..!! கன்னம் திண்ணும்----கன்னம் தின்னும் என்றுதானே இருக்க வேண்டும் ? தின்னப் பழம் கொண்டு வருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் -----பாரதி உரைநடைத் தண்டூன்றி கவிதைகள் தாங்கித் தாங்கி நடக்கும் கணினிக் கவித் தளங்களுக்கிடையில் இலக்கிய இனிமையும் கற்பனை வளமும் நிறைந்த உங்கள் கவித்திறனை மனமுவந்து பாராட்டுகிறேன் . வாழ்த்துக்கள் கவிப்பிரிய நிவேதிதா அன்புடன்,கவின் சாரலன் 09-Apr-2017 8:46 am
உயிரோட்டமான காதலின் சுவாசங்களை மொழிபெயர்த்த அஞ்சலின் உயிர் இக்கவிதை 08-Apr-2017 11:33 pm
கஜபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 11:55 am

மழைக்கால பேருந்தின்
ஜன்னலோர இருக்கைகள் போல
வெறுமையாகவே இருக்கின்றன
என் விடுமுறை காலங்கள்
அருகில் நீ இல்லாததால்

மேலும்

கஜபதி - கஜபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2017 10:00 am

(தான் காதலித்த பெண்ணை கணவன் மற்றும் குழந்தையுடன் சந்தித்த காதலனின் கண்ணீர் துளிகள் )
மீண்டும் ஒரு சந்திப்பு
நம்மிடையே இப்படி ஒரு சந்திப்பு நிச்சயம்
நிகழ்ந்திருக்க கூடாது தான்
என்ன செய்வது
எதிர் பார்க்கதவையும் நடக்க கூடாதவையும்
நிகழ்வது தானே வாழ்கை
இப்பொழுதும் கூட புரிகிறது எனக்கு
நலம் விசாரிக்கும் நோக்கோடு
நீ பார்க்கும் பார்வையின் பாஷைகள்
நான் நலமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் நிறைய மாறி இருக்கிறேன்
ஆம்
இப்பொழுதெல்லாம் யாரேனும் உன் பெயர் சொல்லி
அழைத்தால் நன் திரும்பி பார்ப்பதில்லை
கடற்கரை மணலில் உன் பெயரையும் என் பெயரையும்
சேர்த்து எழுதுவது இல்லை
இரவில் தனி

மேலும்

கஜபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 10:00 am

(தான் காதலித்த பெண்ணை கணவன் மற்றும் குழந்தையுடன் சந்தித்த காதலனின் கண்ணீர் துளிகள் )
மீண்டும் ஒரு சந்திப்பு
நம்மிடையே இப்படி ஒரு சந்திப்பு நிச்சயம்
நிகழ்ந்திருக்க கூடாது தான்
என்ன செய்வது
எதிர் பார்க்கதவையும் நடக்க கூடாதவையும்
நிகழ்வது தானே வாழ்கை
இப்பொழுதும் கூட புரிகிறது எனக்கு
நலம் விசாரிக்கும் நோக்கோடு
நீ பார்க்கும் பார்வையின் பாஷைகள்
நான் நலமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் நிறைய மாறி இருக்கிறேன்
ஆம்
இப்பொழுதெல்லாம் யாரேனும் உன் பெயர் சொல்லி
அழைத்தால் நன் திரும்பி பார்ப்பதில்லை
கடற்கரை மணலில் உன் பெயரையும் என் பெயரையும்
சேர்த்து எழுதுவது இல்லை
இரவில் தனி

மேலும்

கஜபதி - கஜபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2017 3:50 pm

எது அழகு
என்னவளே எப்படி சொல்வேன் இக்கேள்விக்கு பதிலை
விண்மீனை தோற்கடித்த உன்
விழிமீன் என்றா
மலரிதழ் தேனை தேடிய
வண்டு கண்டு மயங்கி
நிற்கும் உன்னிதழ் என்றா
காற்றோடு கூட்டு சேர்ந்து
உன் கன்னம் தீண்டி விளையாடும் உன் கூந்தலா
இல்லை அதனோடு போராடும் உன் மென் கை விரலா
உன் குரலே அழகென்று நான் சொன்னால்
அதுகேட்டு உன் செவிமடல் கோபித்து கொள்ளாதா
ஒருவேளை
உன் முகமே அழகென்றால்
தாமரை பாதத்தை மெல்லிடையை
என்னவென்று சொல்வது
நீயே அழகு என்று பொதுவாய் சொன்னாலும்
போட்டிக்கு அது முடிவை தந்திடுமா
கேள்விக்கு பதிலாய் அமைந்திடுமா
பல
விடை தெரியா கேள்விகள் போலே
இதுவும் விடை இன்றி போய் விடுமோ

மேலும்

கஜபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2017 3:50 pm

எது அழகு
என்னவளே எப்படி சொல்வேன் இக்கேள்விக்கு பதிலை
விண்மீனை தோற்கடித்த உன்
விழிமீன் என்றா
மலரிதழ் தேனை தேடிய
வண்டு கண்டு மயங்கி
நிற்கும் உன்னிதழ் என்றா
காற்றோடு கூட்டு சேர்ந்து
உன் கன்னம் தீண்டி விளையாடும் உன் கூந்தலா
இல்லை அதனோடு போராடும் உன் மென் கை விரலா
உன் குரலே அழகென்று நான் சொன்னால்
அதுகேட்டு உன் செவிமடல் கோபித்து கொள்ளாதா
ஒருவேளை
உன் முகமே அழகென்றால்
தாமரை பாதத்தை மெல்லிடையை
என்னவென்று சொல்வது
நீயே அழகு என்று பொதுவாய் சொன்னாலும்
போட்டிக்கு அது முடிவை தந்திடுமா
கேள்விக்கு பதிலாய் அமைந்திடுமா
பல
விடை தெரியா கேள்விகள் போலே
இதுவும் விடை இன்றி போய் விடுமோ

மேலும்

மணி சின்னசாமி அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2016 4:50 pm

சொல்லாமல் சொன்ன காதல்
(கண்ணீர் துளியில் ஓர் கடிதம் அவள் பார்வைக்கு)


ஆதியும், அந்தமும் இல்லா
மானுட பிறப்பில் !
தனியாத தாகத்தில்
விக்கி தவித்தேன் – அவளின் பிரிவால்.
இன்னொரு
பிறவி - என்றொன்று,
உண்டெனில்……..
அவள் காதலன் - என்ற உறவுக்காக.
மீண்டும்
காத்திருபேன்.

உதிர்ந்த
பூ
காம்பை சேருமா ?

என் காதல் வானத்தில்
தேய்ந்த
நிலவு
பெளர்ணமியாகதா ? – என்ற
தனியாத தாகத்தில்
தவிக்கிறேன்………………..

அவளுக்காக காத்திருந்த நாட்கள்
கரைந்து …………
அவளின்
நினைவுகளோடு,
தெலைந்து போன- என் நாட்களை
கடந்த கால
நாட்குறிப்பேட்டின்
பக்கங்கள்

மேலும்

புரிந்து கொள்ள படாத காதலின் சோகமும் வலிகளும் வரிகளாய் கவிதையில். பாராட்ட பட வேண்டிய படைப்பு வாழ்த்துக்கள் தோழா 08-Feb-2017 4:09 pm
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா ................. 21-Dec-2016 7:03 pm
சுமைகளின் முகவரியில் சிக்கித் தவிக்கிறது நேசிக்கும் உள்ளங்கள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:31 am

வணக்கம் நண்பர்களே
காவேரி பிரச்சனையின் போது கன்னட வெறியர்களால் தமிழர் வாகனங்கள் தீயிடப்பட்ட போதும் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் கர்நாடக போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர் காரணம் அவர்கள் கன்னடர்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் தற்போது தமிழர் உரிமையை தமிழர் பாரம்பரியத்தை காக்க அறவழியில் போராடும் போது கூட தமிழக போலீசார் தடியடி நடத்தியது அவர்கள் தமிழர்கள் தானா என்று கேட்க தூண்டுகிறது..
மத்திய மாநில எச்சை அரசுகளால் வஞ்சிக்கப்படும் நமக்கு இனியும் அவை தேவை தானா..
திமுக அதிமுக இரண்டுமே சதிகாரர்கள் கூட்டமே ..
மற்ற கட்சிகள் யாவும் இந்த இரண்டு கட்சிகளின் செயல் பாடுகளையே பின் பற்றிகொன்டுஇருக்கின்றன
போதும் நண்பர்களே நாம் ஏமாற்றப்பட்டது .
தேசிய மற்றும் திராவிட அரசியல் நமக்கு வேண்டாம் தோழர்களே என்றும் தமிழராய் தமிழர் நாட்டில் வாழ்ந்திடுவோம்

மேலும்

கஜபதி - நாராயணசுவாமி ராமச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2015 2:36 pm

மணற்கோடுகள்....

மீண்டும்
அழித்தெழுதுவேன்
அதே மணற்கோடுகளை-

நிமிர்ந்து பார்க்க-
நெடுவானம் அருகிலும்
நீ,
தொலைவிலும் இருப்பாய்.

"என்னை மன்னிச்சிடுங்க,
எனக்கு,
வேற வழி தெரியலை"
பத்தாவது முறையாக
சுருதி மாற்றியும்,
வார்த்தைகளை மாற்றிப்போட்டும்
சொல்வாய் நீ!

இயலாமையில்
இதயம்கூட
இளைத்து போகும்.
எட்டிப்பார்க்கும் கண்ணீரை
இமைகளே உறிஞ்சிக்கொள்ளும்.

ஒரு
வேலையில்லாப் பட்டதாரியின்
காதல் தோல்விக்கு
வேறென்ன காரணம் இருக்க முடியும்-
வேலையில்லை என்பதைத் தவிர!

அறை திரும்ப,
அம்மாவின் கடிதம்
கதவு திறக்கும்.
அதன் -
ஒட்டிய பகுதிகளில்
இன்னும்,
கண்ணீரின் ஈரம்
காயாமலேயேயிருக்கு

மேலும்

இதய பாரத்தை அதிக படுத்தி இருக்கிறது கவிதை நல்ல படைப்பு தோழரே 16-Nov-2015 3:22 pm
மேலும்...
கருத்துகள்
மேலே