எங்கு தொலைத்தேன் என் நினைவுகளை

காற்றின் இசையில் மௌனமாக
அசைந்தாடும் உன் கூந்தலிலா ?
இல்லை ,
பார்வையால் என்னைத் தொட்டுச் செல்லும்
உன் கண்களிலா ?
இல்லை ,
நான் பேசும் வார்த்தைகளை கேட்காது போல்
கேட்கும் உன் காதுகளிடமா ?
இல்லை ,
காற்றுக்கும் உயிர் கொடுத்த
உன் சுவாசங்களிடமா ?
இல்லை ,
துன்பங்கள் எல்லாம் உன்
கண்ணக்குழிகளோடு தொலைந்து போகும்
உன் புன்னகையிலா ?
இல்லை
என் காதலை இன்னும்
புரிந்து கொள்ளாமல் இருக்கும்
உன் இதயத்திடமா ?
எங்கு தொலைத்தேன் என் நினைவுகளை ??
என்னையே மறந்து
தொலைந்து போகிறேன்
தனிமை என்னும் இருளிலே கிடைக்காத
உன்னைத் தேடி ...
உதடுகள் பேசத் தொடங்கும் முன்னே
கண்கள் பேசத் தொடங்குகின்றன காதலில்
ஆனால்
என் காதல்
கண்கள் பேசத் தொடங்கும் முன்னே
அவளின் நினைவுகள்
என்னோடு பேசத் தொடங்குகின்றன
கனவினில் ...
கரையின் மீது காதல் கொண்ட
கடல் அலைகள் ஓயாமல்
கரையைப் பின் தொடர்வது போல் ,
என் நினைவுகள் உன்னையே
பின் தொடர்கின்றன ...
இரு மனங்கள்
ஒன்று சேர்ந்தால் தான்
காதலா என்ன ???
உன் சுவாசம் பட்ட காற்றிலே
கண்களின் மூலம்
உன் ஓவியம் வரைந்து
என் நினைவின் மூலம்
உனக்கு உயிர் கொடுத்து ,
உன்னுடன் கைகள் கோர்த்து
செல்லப் போகிறேன்
முடிவில்லா பயணமாக
ஒரு காதல் பயணம் ...

எழுதியவர் : கவிஞன் (26-Mar-18, 7:14 pm)
பார்வை : 189

மேலே