என் முதல் கண்டுபிடிப்பு

ஒரு பொறியாளனாய்
நான் கண்டுபிடித்த
முதல் கண்டுபிடிப்பே
உன் விழிகளின் ஈர்ப்பு விசையைத்தான்...
அதன் வலிமையால் நான்
உன் நிழல் போல
உன் பின்னே ஈர்க்கப்பட்டேன்...
என் கால்கள் உன் பின்னால்
நடப்பதற்காக உருவாக்கப்பட்டதைப் போல ,
நீ போகும் இடமெல்லாம்
உன் பின்னால் நடந்து கொண்டிருந்தன...
உன் அருகில் வரும்போது
என் இதயம் இயல்புநிலை அறியாமல் துடிக்க ,
எப்போதும் பேசிக் கொண்டிருக்கும்
என் உதடுகள்
தனக்குப் பேசத் தெரியும் என்பதை மறந்து
ஊமைபோல் இருந்தன...

எழுதியவர் : கவிஞன் (26-Mar-18, 6:48 pm)
பார்வை : 107

மேலே