நாராயணசுவாமி ராமச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நாராயணசுவாமி ராமச்சந்திரன்
இடம்:  Trippur
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Sep-2015
பார்த்தவர்கள்:  270
புள்ளி:  213

என்னைப் பற்றி...

நான் கரை தேடி தவிக்கும் நதி . என்னை கடல் சேரச் சொல்லுது விதி

என் படைப்புகள்
நாராயணசுவாமி ராமச்சந்திரன் செய்திகள்

எதுக்கய்யா உன் பொண்டாட்டியை மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்துனே?
அவ தான் சார் தனியா "போகணும்னு"நச்சரிச்சா அதான் !

மேலும்

நாராயணசுவாமி ராமச்சந்திரன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2016 11:26 pm

4 கேள்விகள் உங்களுக்கு...
ரொம்ப யோசிக்காம உடனே பதில் சொல்லுங்க..
☺நீங்க மட்டுமே அறிவாளி

...
கேள்வி :1
நீங்கள் ஒரு பைக் ரேசில் இருக்கீங்க..
ரொம்ப கஷ்டப்பட்டு 2nd positional இருக்கிறவரை முந்துறீங்க...
இப்போ உங்க position என்ன?
...
...
...
....
Position 1ன்னு சொன்னீங்கன்னா..
நீங்க தப்புங்க..
2வது ஆள முந்தினா நாம 2 வது position க்குத்தான் வருவோம்...
...
.ஓகே..
தெளிவாய்ட்டீங்களா.
...
...
இப்போ அதே ரேசுல நீங்க கடைசியா வருகிறவரை முந்துறீங்கன்னு வச்சுக்கலாம் ..
இப்போ உங்க position என்ன..
டக்குன்னு சொல்லுங்க..

....

கடைசில இருந்து 2வது இடம்னு சொன்னா...
நீங்க சரியா யோசிக்கல

மேலும்

மிக நல்ல பதிவு ! ஒவ்வொரு முறை மொக்கையாகும் போதும் , அடுத்த முறை ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறோம் ஆனாலும் ....... 26-Nov-2016 6:15 pm

யாருய்யா அந்த கோடீஸ்வர பேஷண்ட்டு கிட்ட 500 ரூபாய் , 1000 ரூபாய் நோட்டுக செல்லாதுன்னு சொன்னது?
ஏன் டாக்டர் என்னாச்சு ?
பாரு கோமாவுல இருந்து நல்லாவனுவரு மறுபடியும் கோமாவுக்கே போயுட்டாரு !

மேலும்

நான்
தனிமைப் பூ
பூக்கும் பூங்கா!
என்னுள் எதற்கு
தளிர்களை
நடவு செய்கிறாய் ?

நான்
கண்ணீரை
உதிர்த்து நிற்கும்
கற்பக விருட்சம்
என்னைப் பற்றி
என்ன கவிதை
எழுத வந்திருக்கிறாய் ?

போகுமிடமெல்லாம்
பூவிதைகளை தூவும்
காற்றென
என்னை நீ
கடக்கும் போதெல்லாம்
காதல் செடியை
உன் பார்வைகளால்
பதியானிடுவதும் ஏன் ?

நானொரு
பாலையென்பதும்
அறியாயோ நீ?

வசந்தமே!
நான்
வானம் இழந்த பூமி
வையம் மறந்த சாமி
எனக்கென எதற்கு
இனியும் பசுமை
என்னை என்னோடு
விட்டு விடு!

மேலும்

பற்றிய இரையின்
உயிரடங்கும் வரை
குரல்வளை கவ்வி
காத்திருக்கும்
கொடிய மிருகமெனக் காதல்

எப்போதும்போல்
இந்தக் கோடையிலும்
எனது குடிசை
எரிந்து சாம்பலானது
காதல் நெருப்பு பரிசளித்த
பிரிவுக் காயங்களுடன் நான்

எனதெனும் யாவற்றையும்
பறித்துக் கொண்டு
சுற்றி சுழன்றோடுது
காதல் வெள்ளம்
உயிர் தப்பிய ஆறுதலுடன்
பசியும் களைப்புமாய் நான்

என் கண்ணீர் நதியின்
கரைகளெங்கும்
உன் ஞாபகங்கள்
படித்துறையாய்

என் காதல் வானின்
மேகங்களில்
உன் நினைவுகளோ
காயங்களாய்

நானுன்னை
கனவுகளிலும்
தேடி நின்றேன்
உறக்கமில்லாமல்

நீயென்னை
கண்ணீரில்
தள்ளிவிடாய்
இரக்கமில்லாமல் .....

மேலும்

இங்கு ஏறக்குறைய அரசியல் என்பதே தேர்தலின் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் வந்தால் மட்டுமே மக்களும் அவர்தம் நலமும் பற்றி பேசத் தோன்றுகிறது.
இதில் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சொல்லுவதும் பொய்யை மெய்யாக்குவதும்/ மெய்யை பொய்யாக்குவதும் ஊழலை மறைப்பதும், வெளிக் கொண்டுவருவதுமாய் பரப்புரைக் காலம் முழுவதும் மக்களை குழப்பி விடுகிறார்கள்.
இதில் ஆளும்கட்சியின் சாதனையோ அல்லது ஊழலோ மக்களின் முன் விவாதப் பொருளாக்கி அதன்பின் முடிவெடுக்க அனுமதிக்கப் படுவதில்லை அல்லது அதற்க்கான வாய்ப்போ திறனோ வளர்த்தெடுக்கப் படுவதில்லை.
மற்றபடி பதவி

மேலும்

கருத்திட்டமைக்கு நன்றி! நடப்பில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்யும்போது மக்களுக்கு ஆட்சியை மாற்ற இரண்டு ஆண்டுக்குள்ளேயே வாய்ப்பு உள்ளது, ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க தேவை இல்லை என்றே சொல்ல வருகிறேன் மற்றபடி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் ஆட்சி மாற்றம் வரும் என பொருள் இல்லை. இந்த முறையை செம்மைபடுத்த இன்னும் பல நடைமுறைகள் உள்ளன. உதாரணமாக மூன்றடுக்கு நிர்வாகம், அதாவது 1. ஊராட்சி அமைப்புகள் (ஊராட்சி , நகராட்சி, மாநகராட்சி ....),2. மாநில சட்டமன்றம், 3. பாராளுமன்றம் .என இம்முன்றுக்குமே இவ்விதமான சுழற்சி முறை தேர்தல் என்றால் இரண்டாண்டுக்கு ஒரு முறை அரசியல்வாதிகள் கட்டாயம் மக்களை தேடி வந்தே தீர வீண்டும் என்ற நிலை உருவாகும். அதாவது ஒரே பகுதியில் முதலாம் ஆண்டு (உதாரணமாக ) ஊராட்சி தேர்தலும் , 3 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலும் 5 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் வைப்பதாக இருந்தால் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கொரு முறையும் அரசியல் வாதி வாக்கு கேட்டு மக்களிடம் வந்து நிற்க வேண்டிய சூல்னிலை உருவாகும். அப்போது அவனது முந்தைய இரு வருட செயல்பாடைப் பொறுத்து மக்கள் வாக்களிக்க தீர்மானிப்பார்கள். ஆகா அரசியல் வாதியின் தலைக்குமேல் எப்போதும் ஒரு கத்தி தொங்கி கொண்டேயிருக்கும் .அதை இயக்கும் வாய்ப்பு மக்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கிடைத்துக் கொண்டேயிருக்கும் 19-May-2016 1:47 pm
தாங்கள் கூறிய முறை நன்றாக உள்ளது.ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறினால் நிர்வாகம் சரியான முறையில் இருக்காது என்பது என் கருத்து.ஏனெனில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி நிர்வாகம் குலைகின்றது.மற்ற படி தங்கள் கருத்து சிறப்பாக உள்ளது 18-May-2016 11:37 pm

அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார்.

கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.

இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் :
'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது சிறுநீராச

மேலும்

ஹா ஹா அதுதானே நம்மவங்கள எப்போதும் யாராலையும் ஏமாற்றமுடியாது......அவங்க கில்லாடின்னா நம்ம ஆளுங்க டபுள் கில்லாடி..... 23-Mar-2016 2:20 pm
நன்றி அய்யா 20-Mar-2016 10:06 am
நன்றி 20-Mar-2016 10:05 am
நம்ம ஆளுங்க புத்திசாலிக. 19-Mar-2016 10:25 pm
நாராயணசுவாமி ராமச்சந்திரன் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2016 9:18 am

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8.

மேலும்

நாராயணசுவாமி ராமச்சந்திரன் அளித்த படைப்பை (public) பார்த்திபன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Jan-2016 2:39 pm

நான்
திசைகள் தீர்ந்து போன
தேசாந்திரி

நீயோ
கிழக்கின் ஊற்றுக்கண்
என் வாசல் வந்துன்
வானம் கொஞ்சம்
தெளித்துப் போயேன்

நீயோர்
அமுதக்கலசம்
நானோ
ஒற்றைத்துளி
பருகிச் சிலிர்க்கும்
சிற்றெறும்பு

ஒற்றை இரவுக்குள்
விண்மீன்கள் யாவற்றையும்
எண்ணிவிடத் துடிக்கும்
அறியாச் சிறுவனாய்
உன் காதலும் நானும்

நானின்றேல்
நதியில்லைஎனும்
கர்வப் பொய்மையுள் கரைந்த
கரை நான்

கடலாய் இருந்தும்-
அலைத் தாலாட்டில்
மணல்வெளி மகவை
உறங்கச் செய்யும்
அன்னை நீ

எங்கிருந்து தொடங்குவது-
என்னை?
நீயே முடிவெடு .

மேலும்

மிக்க நன்றி ! 02-Jan-2016 2:32 pm
மிக்க நன்றி ! 02-Jan-2016 2:32 pm
அழகிய வரிகள் 01-Jan-2016 11:37 pm
காதலின் உணர்வுகள் அழகாய் கவிக்குள் கொண்டு வந்து உள்ளீர் இன்னும் பல கவிகள் எழுதிட வாழ்த்துக்கள் 01-Jan-2016 5:47 pm

"எவ்வளவு அழகானது
இந்தப் பூக்கள்" என்று
விரல் சுட்டுகிறாய் நீ
"ஆமாம் மிக அழகானவை"
என்கிறேன்
உன் விரல்களை பார்த்தபடி நான்

"உனக்கு மிகப் பிடித்த
பூவினைச் சொல்"
என்கிறாய் நீ
நான்,
உன் பெயரைச் சொல்கிறேன்

"வண்ணத்துப் பூச்சிகளை
பிடிக்குமா?" என்கிறாய் நீ
"ஆமாம் மிகப் பிடிக்கும்"
என்கிறேன்
உன் இமைகளைப் பார்த்தபடி நான்

"தேன் மிக இனிமையானது"
என்கிறாய் நீ
"ஆமாம் மிகவும் இனிமையானது"
என்கிறேன்
உன் ஈர இதழ்களை நினைத்தபடி நான்

"கவிதை பிடிக்குமா?"
என்கிறாய் நீ
"ஆமாம் அதனால்தான்
படித்துக்கொண்டிருக்கிறேன் உன்னை"
என்கிறேன் நான்

"காதலோடு பேசியதுண்டா?"
என்கிறாய் நீ

மேலும்

அடடா எத்தனை அழகு இயற்கையின் அழகோடு அவளின் அழகிய காட்சியளிக்கும் கண்கள் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2015 11:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே