மாற்று முறை தேர்தல்

இங்கு ஏறக்குறைய அரசியல் என்பதே தேர்தலின் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் வந்தால் மட்டுமே மக்களும் அவர்தம் நலமும் பற்றி பேசத் தோன்றுகிறது.
இதில் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சொல்லுவதும் பொய்யை மெய்யாக்குவதும்/ மெய்யை பொய்யாக்குவதும் ஊழலை மறைப்பதும், வெளிக் கொண்டுவருவதுமாய் பரப்புரைக் காலம் முழுவதும் மக்களை குழப்பி விடுகிறார்கள்.
இதில் ஆளும்கட்சியின் சாதனையோ அல்லது ஊழலோ மக்களின் முன் விவாதப் பொருளாக்கி அதன்பின் முடிவெடுக்க அனுமதிக்கப் படுவதில்லை அல்லது அதற்க்கான வாய்ப்போ திறனோ வளர்த்தெடுக்கப் படுவதில்லை.
மற்றபடி பதவிக்காலம் முழுவதும் முழுமையாக ஊழல் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள் . இதை தவிர்க்க ஒரு வழி உள்ளதாக கருதுகிறேன்.
முதற்கண் பாராளுமன்ற ஆயுட் காலத்தை ஆறு ஆண்டுகளாக அதிகரிப்பது .பின் மக்களவை உறுப்பினர்களையும் ராஜ்ய சபை உறுப்பினர்கள் போலவே 3ல் 1 பங்கு பேரை சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நாட்டின் 3 ல் 1 பங்கு(சுமார் 182 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதான பகுதி ) பகுதியிலிருந்து மக்களிடையேயான தேர்தலின் மூலம் தேர்ந்தெடுப்பது . அடுத்த இரண்டு வருடம் கழித்து நாட்டின் இரண்டாவது பகுதியில் இருந்தும் , அதற்கடுத்த இரு வருடத்தின் பின் மூன்றாவது பகுதியிலிருந்தும் - இவ்வாறான சுழற்சி முறைத் தேர்தலின் மூலம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மைய அரசின் செயல் பாடு மக்களின் மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப் படும்.

அதணால் ஆளும் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமானால் ஊழலில் ஈடுபடாததாக இருக்கவேண்டும். செயல்பாடுகளும் வளர்ச்சி நோக்கி இருக்க வேண்டும். மேலும் உதாரணமாக முதல் இரண்டு ஆண்டின் முடிவில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பெற்றால் அக்கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் . அதற்காக வேணும் பதவியில் உள்ள கட்சி கவனமாக செயல்படும்
அத்தோடு தேர்தல் ஆணையமும் நிரந்தர பணியாட்களுடன் இன்னமும் சிறப்பாக உள்ளூர் பணியாளரைத் தவிர்த்து வெளிப்பகுதி பணியாளர்களைக் கொண்டு தேர்தலை நடத்த முடியும்.
வேண்டுமானால் இம்முறையை முதலில் புதுச்சேரி போன்ற சிறு மாநிலங்களில் செயல்படுத்தி சாதக பாதங்களை அறிந்து பின் சட்டசபைகளுக்கும் அதன்பின் பாராளுமன்றத்திற்க்கும் பயன் படுத்தலாம்

எழுதியவர் : (18-May-16, 4:10 pm)
பார்வை : 103

மேலே