காதல்

பற்றிய இரையின்
உயிரடங்கும் வரை
குரல்வளை கவ்வி
காத்திருக்கும்
கொடிய மிருகமெனக் காதல்

எப்போதும்போல்
இந்தக் கோடையிலும்
எனது குடிசை
எரிந்து சாம்பலானது
காதல் நெருப்பு பரிசளித்த
பிரிவுக் காயங்களுடன் நான்

எனதெனும் யாவற்றையும்
பறித்துக் கொண்டு
சுற்றி சுழன்றோடுது
காதல் வெள்ளம்
உயிர் தப்பிய ஆறுதலுடன்
பசியும் களைப்புமாய் நான்

என் கண்ணீர் நதியின்
கரைகளெங்கும்
உன் ஞாபகங்கள்
படித்துறையாய்

என் காதல் வானின்
மேகங்களில்
உன் நினைவுகளோ
காயங்களாய்

நானுன்னை
கனவுகளிலும்
தேடி நின்றேன்
உறக்கமில்லாமல்

நீயென்னை
கண்ணீரில்
தள்ளிவிடாய்
இரக்கமில்லாமல் .....

எழுதியவர் : நாராயணஸ்வாமி ராமசந்திரன் (4-Aug-16, 1:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 188

மேலே