தமிழ்

தழிழ்ச்சொல்!

எழுத்துக்கூட்டிப் படித்த
முதல் வார்த்தை
என்னவென்று தெரியாது!

உதடுகள் முனுமுனுத்த
முதல் பாடல் யாருடையது
தெரியாது!
அத்தனை நொடிகளும்
மறந்து போயினும்
அம்மா கொஞ்சிய
முதல் தமிழ்ச்சொல்லை மறவேன்!

கண்கள் மங்கி கால்கள் நடுங்கி
உணர்வுகள் இழந்து
நினைவிழந்த போதும்
நம்மை அடையாளம்
காட்டுவது தாய்மொழியே!
அதுவே நம் உயிர்மொழி!

பாலினும் தேனினிது!
தேனினும் அமுதினிது!
அமுதினும் சொல்லினிது!
சொல்லினும் இனிது

தழிழ்ச்சொல்லே!
தழிழ்ச்சொல்லே!
தழிழ்ச்சொல்லே!

எழுதியவர் : கோ.குப்பன் (4-Aug-16, 12:57 pm)
சேர்த்தது : குப்பன் கோ
Tanglish : thamizh
பார்வை : 222

மேலே