அவள் ஒரு தேவதை ரவிsrm இன் காதல் கவிதை

கையில் தீபம் ஏந்திக் கொண்டு குளக்கரை நோக்கி அவள் நடக்க
சிலு சிலு காற்று
அவள் தலை முடிகளை தவழுது !!!


இடையோடு இணைத்திருக்கும் ஒட்டியாணம்
அவள் இடுப்புடன் இன்னும் ஒட்டி உறவாடுது அவளை இறுக்கி கட்டிக் கொண்டு !!!


விழியெங்கும் மை துகள் தான் அவள் ஏந்தி நிற்கு
அகல் விளக்கின் எண்ணையில்
பல வண்ணம் காட்டுதே !!!


காதில் இருக்கு முத்து கம்பலும் கச்சிதமாக அவளுக்கு பொருந்த அவள் கை குட்டை வழி கேட்குதே தான் அமர தளி போ ஒட்டியாணமே !!!


நெத்திலி வண்ண குங்குமம்
சின்ன நிலா வந்து அமர்ந்துள்ள திண்ணம் ஆனதே !!!


கையெங்கும் குலுங்கும் வளையல் பேசு இசைதான் என்னவோ
அது அவள் சிரிப்புக்கு இணையான ஒரு இசை கருவி சின்னமோ !!!


அணிந்துள்ள ஆடையில் அணைத்து ஆபரணங்களும் அவளுடன் ஜொலித்து வர
காலில் ஒளிந்துள்ள
கொலுசின் ஓசை சொல்லும் இவள் அழகை அனைவரும் பார்க்க கூச்சலிட்டு .......


படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி. சு (4-Aug-16, 10:26 am)
பார்வை : 465

மேலே