குப்பன் கோ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குப்பன் கோ |
இடம் | : கும்மிடி பூண்டி |
பிறந்த தேதி | : 24-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 195 |
புள்ளி | : 19 |
நானும் ஒரு தமிழ் காதலன்
பொங்கலோ பொங்கலுன்னு
பொங்குதம்மா பொங்கலு!
நேத்துவரை அனுபவிச்ச
துன்பமெல்லாம் பறக்குதம்மா!
பச்சரிசியைப் பார்க்கையில
பால்மணம் பொங்குதம்மா!
பாலகர் உள்ளமெல்லாம்
பட்டொளி வீசுதம்மா!
கும்மிகொட்டி நான்
சேர்த்த சில்லரையெல்லாம்
பொங்கலாக பொங்குதம்மா
குவலயம்தான் வழியுதம்மா!
செங்கரும்பைச் சுவைக்கையிலே
சொப்பனங்கள் தோன்றுதம்மா
என்மனச் சோலையிலே!
கார்முகிலும் காலையிலே
அருள் பனியைத் தூவுதம்மா!
கதிரவனும் கண்விழித்து
செங்கதிரை வீசுதம்மா!
எந்திரக் கலைப்பையெல்லாம்
எருதுகளைத் தொழுதம்மா!
ஏங்கி ஏங்கி நிற்குதம்மா
ஏழுலகும் ஆவின் பாலுக்கு!
பாரின் பசியெல்லாம் பறக்குதம்மா
பாமரன் நட்ட நாற்ற
பொங்கலோ பொங்கலுன்னு
பொங்குதம்மா பொங்கலு!
நேத்துவரை அனுபவிச்ச
துன்பமெல்லாம் பறக்குதம்மா!
பச்சரிசியைப் பார்க்கையில
பால்மணம் பொங்குதம்மா!
பாலகர் உள்ளமெல்லாம்
பட்டொளி வீசுதம்மா!
கும்மிகொட்டி நான்
சேர்த்த சில்லரையெல்லாம்
பொங்கலாக பொங்குதம்மா
குவலயம்தான் வழியுதம்மா!
செங்கரும்பைச் சுவைக்கையிலே
சொப்பனங்கள் தோன்றுதம்மா
என்மனச் சோலையிலே!
கார்முகிலும் காலையிலே
அருள் பனியைத் தூவுதம்மா!
கதிரவனும் கண்விழித்து
செங்கதிரை வீசுதம்மா!
எந்திரக் கலைப்பையெல்லாம்
எருதுகளைத் தொழுதம்மா!
ஏங்கி ஏங்கி நிற்குதம்மா
ஏழுலகும் ஆவின் பாலுக்கு!
பாரின் பசியெல்லாம் பறக்குதம்மா
பாமரன் நட்ட நாற்ற
இன்றைய இந்தியாவில்,
ஆசைக்கு இனங்காதவள்மேல்
அமிலம் வீசலாம்!
அன்பு காதலர்களின் கழுத்து
அறுத்து போடலாம்!
காமப் பசிக்கு கண்டவளையும்
புசிக்கலாம்!
கோடிகோடியாய் ஏய்த்துவிட்டு
அரசுக்கு அறிவுரை கூறலாம்!
விவசாயநிலமகளை பன்னாட்டு
முதலாளிகட்கு விலைமகளாக்கலாம்!
அரசியல் பிழைத்தால்
அறமழித்து வாழலாம்!
தலைமை அமச்சரானால்
தரணியையே வலம் வரலாம்!
சமதர்மம் பேசுவோரை சிறைச்
சாலையில் தள்ளலாம்!
நடுநிலை காப்பவரின்
இன்னுயிர் பறிக்கலாம்!
கடமையைச் செய்வோரை
மனவுளைச்சலால்மரணிக்கச் செய்யலாம்!
அனைத்தையும் சுதந்த
எழுதுகோலைஉயர்த்தியவன்
முத்துமுத்தான
வரிகளைஈந்த
முத்துக் குமரா - உன்
வெண்முத்துக்கள் உதிர்த்த
நன்முத்துக்களை பெருந்துயரில்
ஆழ்த்தியதுஏனோ?
தந்தையின் தகவுகளை
தரணிக்கு சொன்னவனே!
தங்கத் தழிழை
தரமாகத் தந்தவனே!
'பேசுகிறேன் பேசுகிறேன் உன்
இதயம் பேசுகிறேன்" என
தன்னம்பிக்கை ஊட்டியவனே!
'கண்பேசும் வார்த்தைகளை"
'சுட்;டும் விழிச் சுடரை" என
விளித்தவனே!
'அணிலாடும் முன்றில்" லில் - என்னை
அலைபாய வைத்தவனே!!
உன்னுள் என்னையே
'வேடிக்கைப் பார்க்க” வைத்தவனே!
அப்பாக்களின் தாலாட்டாம்
'ஆனந்தயாழை" மீட்டியவனே!
காதலர்களின் சொப்பனமான
'தேவதையைக் கண்டவனே"!
குரலொலியைஉயர்த்தாது
எழு
சீதையின் பொறுமையையும்
கண்ணகியின் கற்பையும்
ராதையின் அழகையும்
ஒரு சேர பெற்றவளே
நீ தான் எம் தாய் மண்ணின்
தமிழ் மகளோ........
பலவகையான வண்ணச் சாயங்கள்
பூசிக்கொண்டு
பாவாடையில் பணிக்குச் செல்லும்
பட்டணத்து பத்மினிக்களுக்கு
நடுவில்
மஞ்சள் நீராடி நெற்றி திலகமிட்டு
ஒற்றை சடையில்
ஒரு சரம் மதுரை மல்லியை
வைத்து கொண்டு
ஆத்துகாரனை பணிக்கு அனுப்பும்
அழகியே
நீ தான் எம் தமிழ் மகளின்
தலை மகளோ..........
நீ எம் தமிழ் மகள்
தலை மகள்
மட்டும்
தழிழ்ச்சொல்!
எழுத்துக்கூட்டிப் படித்த
முதல் வார்த்தை
என்னவென்று தெரியாது!
உதடுகள் முனுமுனுத்த
முதல் பாடல் யாருடையது
தெரியாது!
அத்தனை நொடிகளும்
மறந்து போயினும்
அம்மா கொஞ்சிய
முதல் தமிழ்ச்சொல்லை மறவேன்!
கண்கள் மங்கி கால்கள் நடுங்கி
உணர்வுகள் இழந்து
நினைவிழந்த போதும்
நம்மை அடையாளம்
காட்டுவது தாய்மொழியே!
அதுவே நம் உயிர்மொழி!
பாலினும் தேனினிது!
தேனினும் அமுதினிது!
அமுதினும் சொல்லினிது!
சொல்லினும் இனிது
தழிழ்ச்சொல்லே!
தழிழ்ச்சொல்லே!
தழிழ்ச்சொல்லே!
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
மெட்ராஸ் என்பதன் பொருள் என்ன?
கரையாத நினைவுகள்!
கல்லூரி நினைவுகள் என்றும்
கரையாத கனவுகள்!
சிறு கதையான கனவுகளின்
தொடர் கதைகள்!
பரிச்சயமாகும்
பரிச்சயமில்லா முகங்கள்!
கலகலவென கைகோர்த்து
கதை கதைக்கும் நண்பர்கள்!
வகுப்பறைச் சுவர்களும்
மேளம் தட்டிய மேசைகளும்
மௌனமாய் சொல்லும் எமது
மலரும் நினைவுகளை!
முன்னேறும் முயற்சியில்
முதலிருக்கை பிடிக்கும்
முந்திரிக் கொட்டைகளும்
பின்னே பார்க்கலாம் என்ற
நினைப்பில் பின்னிருக்கையில்
பிண்ணிப் பிணைந்திருக்கும்
அதிமேதாவிகளும்
ஒட்டி உறவாடிய நிமிடங்கள்
நடமாடுகின்றன எம் கண்முன்னே!
பரிட்சை பயத்தில்
பசியை மறந்து
பச்சோந்தி ஆன நிமிடங்கள்!
பெற்றோரையும் மறந்து
ப