எழுதுகோலைஉயர்த்தியவன்

எழுதுகோலைஉயர்த்தியவன்
முத்துமுத்தான
வரிகளைஈந்த
முத்துக் குமரா - உன்
வெண்முத்துக்கள் உதிர்த்த
நன்முத்துக்களை பெருந்துயரில்
ஆழ்த்தியதுஏனோ?
தந்தையின் தகவுகளை
தரணிக்கு சொன்னவனே!
தங்கத் தழிழை
தரமாகத் தந்தவனே!
'பேசுகிறேன் பேசுகிறேன் உன்
இதயம் பேசுகிறேன்" என
தன்னம்பிக்கை ஊட்டியவனே!
'கண்பேசும் வார்த்தைகளை"
'சுட்;டும் விழிச் சுடரை" என
விளித்தவனே!
'அணிலாடும் முன்றில்" லில் - என்னை
அலைபாய வைத்தவனே!!
உன்னுள் என்னையே
'வேடிக்கைப் பார்க்க” வைத்தவனே!
அப்பாக்களின் தாலாட்டாம்
'ஆனந்தயாழை" மீட்டியவனே!
காதலர்களின் சொப்பனமான
'தேவதையைக் கண்டவனே"!
குரலொலியைஉயர்த்தாது
எழுதுகோலைஉயர்த்தியவனே!
உன் எழுத்துக்களோ
திரையுலகின் எழிலேறு - அவை
என்றும் பெற்றிடும் நிலைபேறு– உன்
காலத்தில் வாழ்ந்தேன் என்பதே–என்வாழ்
காலத்தின் பெரும்பேறு!