சாரல்

சில்லென்ற சாரலில்
மழலை முகம்
அகமகிழ்ந்து பூத்திருக்க...

சாளரத்தின் உள்ளே
வந்த சாரலில்
தங்கை அவள் தாளம் இட...

மேல்மாடியில் துணி எடுக்கும் நேரம்
அக்கா அவள் நடனமாட...

சில்லென்ற சாரலில்
அம்மா சுடச்சுட பஜ்ஜி போட...

வீடடைவதற்குள் வந்த சாரலை
அப்பா திட்டிக்கொண்டே குடையை மடக்க...

அண்ணன் மட்டும் ஆடியில் அம்மா
வீடு சென்ற அண்ணியை நினைத்துக்கொண்டே
சாரலிடம் சண்டை இடுகின்றான்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (29-Aug-16, 5:49 pm)
Tanglish : saaral
பார்வை : 142

மேலே