உண்டியல்

உண்டியல்
************

ஒரு பத்து வயசுப் பையன்...

அவனோட பள்ளியில
அவனுக்கு பிடிச்ச வாத்தியார்
அன்னைக்கு பாடம் நடத்தினார்...
சிறுசேமிப்பு பத்தி...

"தம்பிங்களா...
எல்லோரும் நாளைல இருந்து
உண்டியல்ல காசு போட்டு
சேமிச்சி வைக்கனும்...

அந்த பழக்கம்தான் உங்க
வருங்கால வாழ்க்கைக்கு
அடுத்து உதவும்"னு சொல்றார்...

அவனும் தினமும்
அப்பா கொடுக்குற காசுல
பாதிய உண்டியல்ல
போட்டுவைக்கான்...

ஒவ்வொரு தடவையும்
காசு போடும்போது
அவனுக்கு பெருமையா இருக்கும்...

'நாம வாத்தியார் சொல்ல
தட்டாம நடக்கிறோம்'னு...

ஒருநாள் வாத்தியார் கேட்கிறார்
பசங்க கிட்ட....

"யாரெல்லாம்
நான் சொன்ன மாதிரி
உண்டியல்ல காசு போடுறீங்க...
கைய தூக்குங்க..."

உடனே இவன்
முதல் ஆளா கைய தூக்குறான்...

எல்லோரும் அவன பாத்து
கைதட்ட இன்னும் பெருமையா
இருந்துச்சி...

வாத்தியார் கூப்ட்டு வச்சி
கைகொடுத்தார்...

வெரிகுட்"னு சொல்றார்...

இவனுக்கு சந்தோஷம் தாங்க
முடியல...

கொஞ்ச நாள் கழிச்சி
ஒருநாள்...

அது
முழுப்பரிச்சைக்கு
முந்தின நாள்...

எல்லோரும் இன்னும் கொஞ்ச
நாள்ல மேல் படிப்புக்கு போறாங்க...

அதாவது ஆறாவது படிக்க...
ஆனா அதுக்கு
வேற பள்ளிக்குத்தான் போகணும்...

அந்த பள்ளியில அஞ்சாப்பு
வரைக்கும்தான் இருக்கு...

அன்னைக்கு அந்த வாத்தியார்
எல்லோரையும் பார்த்து...

"அந்த உண்டியலை எல்லோரும்
நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு
எடுத்துட்டு வரனும்"னு
சொல்றார்...

மறுநாள் பள்ளி ஆரம்பிக்குது...
எல்லோரும் உண்டியல் கொண்டுவர...
இவன் கையில் ஒண்ணுமே இல்ல...

வாத்தியார் இவன்மேல் உள்ள
நம்பிக்கையில் இவன
முதல் ஆளா கூப்பிடுறார்...

அரை மனதுடன்
அவருக்கு முன்னாடி போய் நிக்கிறான்...

"எங்கடா உண்டியல்"னு வாத்தியார் கேட்க...

அவன் மெதுவா வாத்தியார்ட்ட
விசயத்தை சொல்ல...

அவன் தலையில நச்சினு
ஒரு கொட்டு விழுது...

அவன் அமைதியா
தன் தலைய தடவிக்கிட்டு
போய் உக்கார...

என்னாச்சி என்னாச்சின்னு
எல்லோரும் கேக்க...

இவனால ஒண்ணும் சொல்ல முடியல...

எப்படி சொல்வான்...
இத்தன நாள் காசு போட்டது
"கோவில் உண்டியல்ல"னு...

இவண்
✒க.முரளி ( spark MRL K)

எழுதியவர் : க.முரளி (29-Aug-16, 7:02 pm)
Tanglish : undiyal
பார்வை : 2252

மேலே