கவிதை 119 இல்லை அவனுக்கு இனியில்லை

இளமை என்றும் மறக்கவில்லை
முதுமை எதுவரை புரியவில்லை
காலம் என்றுமே குறைவில்லை
நேரம் எளிதாய் போகவில்லை

உழைத்திட மனதிற்கு பிடிக்கவில்லை
வெறுத்திட முயன்றும் மனமில்லை
கொடுத்திட விரும்பியும் வழியில்லை
தடுத்திட நினைத்தும் துணிவில்லை

தூக்கம் சரியாய் வருவதில்லை
ஏக்கம் இருந்தும் மிகையில்லை
வறுமை உழைத்ததால் வரவில்லை
செழுமை இருந்தும் நிறைவில்லை

பிரச்சினை என்பது புதியதில்லை
வழிமுறைகள் எதுவென தெளிவில்லை
பாதைகள் எளிதென தெரியவில்லை
பயணங்கள் என்றும் முடியவில்லை

வேதங்கள் பலமுறை விளங்கவில்லை
சொந்தங்கள் எல்லாம் அருகிலில்லை
பந்தங்கள் இருந்தும் தொடர்பில்லை
சோகங்கள் சீக்கிரம் முடிவதில்லை

சலனங்கள் இருக்கும்வரை தெளிவில்லை
நம்பிக்கை இருந்தால் தோல்வியில்லை
அனுபவம் வாழ்வில் கைவிடுவதில்லை
முதுமை வருவது வெறுப்பதுமில்லை

உணர்ச்சிகள் புரிந்தால் பகையில்லை
தளர்ச்சிகள் வெற்றிக்கு துணையுமில்லை
தேவைகள் இருந்தும் அதிகமில்லை
தவறுகள் தோல்வியை தடுப்பதுமில்லை

முற்காலம் முடிந்தும் சரித்திரமுமில்லை
பிற்காலம் நிச்சியமாக தரித்திரமுமில்லை
எக்காலம் நம்பிக்கையால் கலக்கமுமில்லை
பொற்காலம் இனி தூரமுமில்லை

இறைவன் உணர்ந்தால் பயமில்லை
குறைகள் அதிகமாய் தெரிவதுமில்லை
முதுமை வந்தது பாரமுமில்லை
இல்லை அவனுக்கு இனியில்லை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (29-Aug-16, 7:36 pm)
பார்வை : 91

மேலே