ராஜேந்திரன் சிவராமபிள்ளை - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜேந்திரன் சிவராமபிள்ளை |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 20-Jan-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 1268 |
புள்ளி | : 638 |
ஆலோசகர் (ஓய்வு ), மத்திய புலனாய்வுத் துறை
பரந்து விரிந்த உலகம் இன்று சுருங்கித் தான் போனதுவே
என் உள்ளம் என் கவிதை எண்: 29
பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே
முதுமை காலம் வந்ததுமே
நெஞ்சில் பயமும் சூழ்ந்தனவே
பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே
முதுமை காலம் வந்ததுமே
நெஞ்சில் பயமும் சூழ்ந்தனவே-
நெஞ்சும் பாலைபோல் ஆனதுவே
பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே மிகவும்
சுருங்கித் தான் போனதுவே
கூடி வாழ்ந்த காலத்திலே
வீட்டில் இன்பம் நிறைந்ததுவே
யாரும் இன்றி வாழ்கையிலே
கண்ணில் நீரும் வரண்டதுவே
கூடி வாழ்ந்த காலத்திலே
வீட்டில் இன்பம் நிறைந்ததுவே
யாரும் இன்றி வாழ்கையிலே
கண்ணில் ந
268 வசமாய் மாட்டிகிட்டார்
அழகு சுந்தரி அழகின் "ஓய்வின் நகைச்சுவை"
அழகு: ஏண்டி! சில நேரம் நினச்சுப் பார்க்கிறேன். நான் என்ன கோபப்பட்டாலும், எதையும் நினைக்காது எனக்கு வேண்டியதெல்லாம் அப்பப்போ தர்றதே நினைக்கிறச்சே! நான் என்ன செய்தாலும் ஈடே ஆகாதடி! யு ஆர் கிரேட்!!
சுந்தரி: நான் என்னங்க பெருசா செய்துட்டேன்!. ஆனால் நான் வேண்டாம்னாலும் கேட்கவா போறீங்க! வேனும்னா சின்னதா 9 கல் வச்சே வைரகம்மல் வாங்கித்தாங்கோ அதும் நீங்க ஆசை பட்டதால் கேட்கிறேன், எனக்கு இன்டரெஸ்ட்சே இல்லை (மனதிற்குள்: வசமா மாட்டிகிட்டீரா!! ஐ வாஸ் ஜஸ்ட் வைட்டிங் - வாக்குறுதி கொடுத்தா காப்பாத்தணும்
அழகு:(தனக்குள் - அடேய் கோவிந்த
நம்ம வீட்டு பொருளாதாரம்
அழகு சுந்தரி அழகின் ஓய்வின் நகைச்சுவை
சுந்தரி: ஏங்க! இன்னைக்கு பூரா எல்லோரும் பொருளாதாரத்தை பற்றியே பேசிண்டிருக்காங்க ஒண்ணும் புரியலே. சரி நம்ம வீட்டு பொருளாதாரம் எப்படிங்க இருக்கு?
அழகு: அவங்க எல்லோரும் சொல்லற மாதிரி அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சுவிஸ் காம்பேர் செய்றப்போ பெட்டரா இருக்கு
சுந்தரி: பக்கத்துக்கு வீட்டே காம்பேர் செய்றச்சே?
அழகு: அடியே! எப்போ பார்த்தாலும் பக்கத்துக்கு வீட்டே காம்பேர் செய்யாதேன்னு எத்தனே தடவை சொல்றது உனக்கு?
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன்
அவர்கள் இருந்த இடத்தினிலே
காலம் என்னை நிறுத்துதம்மா - அன்று
அவர்கள் இருந்த இடத்தினிலே
காலம் என்னை நிறுத்துதம்மா - எனது
மனசும் வலிமை இழக்குதம்மா
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே
தத்திதத்தி நடந்த போது
தோளில் சுமந்த தந்தையெங்கே '- அன்று
தத்திதத்தி நடந்த போது
தோளில் சுமந்த தந்தையெங்கே
தளர்ந்து தரையில் விழும்போது
நெஞ்சும் கனமாய் வலிக்குதாம்மா இன்றுநான்
தளர்ந்து தரையில் விழும்போது
நெஞ்சும் கனமாய் வலிக்குத
10 என்ன தவம் செய்தோனோ - தாத்தா பேத்தி தாலாட்டு - எண் 10
என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு - நான்
என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு -
செய்த தர்மம் தேவதையாய்
மார்பில் சாய்ந்து சிரிக்குதம்மா - நான்
செய்த தர்மம் தேவதையாய்
மார்பில் சாய்ந்து சிரிக்குதம்மா - எந்தன்
மார்பில் சாய்ந்து சிரிக்குதம்மா
என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு
நான் என்ன தவம் செய்தோனோ
பிறர்க்கு செய்த உதவியெல்லாம்
குழந்தைவடிவில் தவழுதம்மா - - நான்
பிறர்க்கு செய்த உதவியெல்லாம்
குழந்தைவடிவில் தவழுதம்மா -
பிறவிபலனை அடைந்துவிட்டேன்
நெஞ்சினிலே உதைகையிலே - நான்
பிறவிபலனை அடைந்துவ
வாழ்வில் தடுமாற்றம் மற்றும் ஏமாற்றம் வருவதை எப்படி கையாள்வது?
கேப்டன் ஆப் தி ஷிப்
ஓய்வின் நகைச்சுவை : 211
சாந்தி: ஏன்னா! குழந்தைகளை ரெம்ப தேடுது. அவாளுக்கு பிடிச்சதை செஞ்சி நாமே சாப்புட-
றச்சே மனசுக்கு ரெம்ப கஷ்டம்மா இருக்குன்னா!! (திரும்பி கண்களை,அவர் அறியாது, துடைத்துக்கொள் கிறார்)
ராமு: அடியே (பாடுகிறார்) இப்போ நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரிடி
சாந்தி: உங்களை மாதிரி எல்லாத்தையும் பிலோசோபிக்காலா, ஸ்போர்ட்டிவ்வா எடுத்துண்டு ஹாப்பியா இருக்க நேக்கு முடியலைன்னா!!
ராமு: அதாண்டி ரெட்டீர் ஆசாமி மகா மந்திரம். லிவ் பார் ஜஸ்ட் தட் டே ஹாப்பிலி. வி ஆர் அல்வய்ஸ் கேப்டன் ஒப் தி ஷிப் டேக் இட் ஈஸி (அவளுக்கு தெரியாமல், திரும்பி அவர் கண
மழையே மழையே போய்விடு
ஓய்வின் நகைச்சுவை: 197
மனைவி: ஏன்னா நீங்க சின்ன பிள்ளையா இருக்கறச்சே ப்ரொபெஷனல் கிரிக்கெட்டேர் ஆகியிருக்கலாம்!
கணவன்: இத்தனை வருஷத்திற்குப்பிறகு ஏண்டி இந்த ஞனோதயம்?
மனைவி: மழை வந்தா ஏன் விளையாடலைனு ஒருத்தரும் கேட்கப்போறதில்லை. சம்பளத்தை யாரும் பிடிக்கப்போவறதுமில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன் மட்டும் லோ லோனு புலம்புவன். எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கலாம் பாருங்கோ
கணவன்: இப்போ நீ என்னடி சொல்லவாறே?
மனைவி: 3 மணியிலிருந்து இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்- கோனு
இசையென்னும் கவிதை 11
காலமெல்லாம் நீ சுமந்தாய்
ஆராரோ பாடி அன்று
ஆரம்பித்த வாழ்க்கையிது
யாராரோ வந்தபின்னும்
யாருமில்லை முடிவினிலே
நெஞ்சிக்குள்ளே நீ வளர்த்தாய்
மஞ்சத்தினை நீ மறந்தாய்
வஞ்சியவள் வந்தவுடன்
வாஞ்சையுடன் மறந்தனனே
காசு பணம் ஏதுமின்றி
காலமெல்லாம் நீ சுமந்தாய்
அந்தசெல்வம் வந்தபின்னும்
உனைசுமக்க யாருமிலையே
பெற்றமனம் பித்தடியோ
பிள்ளைமனம் கல்லடியோ
பார்த்தமனம் நோகுதடி
பாசம்விலை போனதடி
கலைமகளும் நீதானே
அலைமகளும் நீதானே
மலைமகளும் நீதானே
புரியலையே வாழ்ந்தபோது
இக்கவிதையினை பாடலாக youtube இணையதளத்தில் காண https://youtu.be/dzJ0g4rOMrw
"நீயில்லாமல் எது நிம்மதி
உங்கள் மனம் கவலையில் துடிக்கும் போதும், உங்களுக்கு யாருமில்லை என்று நினைத்து கதறும் போதும் மனஅழுத்தத்திலிருந்து விடுபட இந்தப்பாடலைக் கேளுங்கள். அற்புதமான ஒரு உணர்வினைப் பெறுவீர்கள். கீழ்காணும் youtube இணையத்தளத்தினை தேர்வு செய்யுங்கள். பிடித்திருந்தால் பகிருங்கள்
மனநிலை - நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏன் பல்வேறு உணர்ச்சிகளை காட்டுகிறோம்?, கீழ் காணும் பேச்சினை தேர்வு செய்து கேளுங்கள்