தாயுமில்லே தந்தையுமில்லே நானே முதிர்ந்து நிற்கின்றேன்
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன்
அவர்கள் இருந்த இடத்தினிலே
காலம் என்னை நிறுத்துதம்மா - அன்று
அவர்கள் இருந்த இடத்தினிலே
காலம் என்னை நிறுத்துதம்மா - எனது
மனசும் வலிமை இழக்குதம்மா
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே
தத்திதத்தி நடந்த போது
தோளில் சுமந்த தந்தையெங்கே '- அன்று
தத்திதத்தி நடந்த போது
தோளில் சுமந்த தந்தையெங்கே
தளர்ந்து தரையில் விழும்போது
நெஞ்சும் கனமாய் வலிக்குதாம்மா இன்றுநான்
தளர்ந்து தரையில் விழும்போது
நெஞ்சும் கனமாய் வலிக்குதாம்மா - எந்தன்
கண்ணை நீரும் மறைக்குதம்மா
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே
பதறி துடித்த பொழுதெல்லாம்
அன்புடன் அணைத்த தாயுமெங்கே - அன்று
பதறி துடித்த பொழுதெல்லாம்
அன்புடன் அணைத்த தாயுமெங்கே
சின்னஞ் சிறிய உலகத்துக்குள்
மனசும் சோர்ந்து துடிக்குதாம்மா - இன்று
சின்னஞ் சிறிய உலகத்துக்குள்
மனசும் சோர்ந்து துடிக்குதாம்மா- காணாது
நெஞ்சும் பதறி கலங்குதம்மா
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே எனக்கு பகையானேன்
நானே எனக்கு துணையுமானேன் - இன்று
நானே எனக்கு பகையானேன்
நானே எனக்கு துணையுமானேன்
ராகம் பாடும் நெஞ்சத்திற்கு
முதுமை கடக்கும் வரம்தருவாய் - இன்று
ராகம் பாடும் நெஞ்சத்திற்கு
முதுமை கடக்கும் வரம்தருவாய் - வரும்நாளில்
சிரித்து வாழும் நிலைதரூவாய்
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன்
அவர்கள் இருந்த இடத்தினிலே
காலம் என்னை நிறுத்துதம்மா - அன்று
அவர்கள் இருந்த இடத்தினிலே
காலம் என்னை நிறுத்துதம்மா - எனது
மனசும் வலிமை இழந்ததம்மா
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே
தாயுமில்லே தந்தையுமில்லே
நானே முதிர்ந்து நிற்கின்றேன் - இன்று
தாயுமில்லே தந்தையுமில்லே