என்னருகே நீ இருந்தால்

கொட்டும் மழையோ
கொளுத்தும் வெயிலோ
கண்டுகொள்ளாமல் போவேன்
என்னருகே நீ இருந்தால்

கவலையில் கசியின்
நீர் கூட
கண்ணை விட்டு
விலகிப் போகும்
என்னருகே நீ இருந்தால்

கோடை காலமும்
வெயில் காலமும்
அனைத்தும் சுகமாய் மாறும்
என்னருகே நீ இருந்தால்

எப்படி தான் வர்ணித்தாலும்
இப்படியே தான் கிடக்கிறேன்
என்னருகே நீ இருந்தால்

அடி என்னவளே
உலகம் மறந்து போகிறேன் என்னருகே நீ இருந்தால்

எழுதியவர் : (8-Jan-23, 11:38 am)
பார்வை : 218

மேலே