பரந்து விரிந்த உலகம் இன்று சுருங்கித் தான் போனதுவே என் உள்ளம் என் கவிதை எண் 29

பரந்து விரிந்த உலகம் இன்று சுருங்கித் தான் போனதுவே
என் உள்ளம் என் கவிதை எண்: 29

பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே
முதுமை காலம் வந்ததுமே
நெஞ்சில் பயமும் சூழ்ந்தனவே
பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே
முதுமை காலம் வந்ததுமே
நெஞ்சில் பயமும் சூழ்ந்தனவே-
நெஞ்சும் பாலைபோல் ஆனதுவே
பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே மிகவும்
சுருங்கித் தான் போனதுவே

கூடி வாழ்ந்த காலத்திலே
வீட்டில் இன்பம் நிறைந்ததுவே
யாரும் இன்றி வாழ்கையிலே
கண்ணில் நீரும் வரண்டதுவே
கூடி வாழ்ந்த காலத்திலே
வீட்டில் இன்பம் நிறைந்ததுவே
யாரும் இன்றி வாழ்கையிலே
கண்ணில் நீரும் வரண்டதுவே
செய்வது யாதென புரியையே
பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே மிகவும்
சுருங்கித் தான் போனதுவே

புதிதாய்மணந்த தம்பதி போலெ
மீண்டும் கரத்தை பற்றுகின்றோம் - நாங்கள்
ஏழுஅடிகள் எடுத்துவைத்து
மீண்டும் வாழ்வை துவக்குகின்றோம் –
புதிதாய்மணந்த தம்பதி போலெ
மீண்டும் கரத்தை பற்றுகின்றோம் - நாங்கள்
ஏழுஅடிகள் எடுத்துவைத்து
மீண்டும் வாழ்வை துவக்குகின்றோம்
மகிழ்வுடன்வாழ என்றும்துடிக்கின்றோம்

நல்ல நட்பு இல்லாது
வாழ்வுமுழுதும் கடந்துவிட்டோம்
உயிரில் கலந்த நட்பாக
இன்றுநாங்கள் உருவெடுத்தோம்
நல்ல நட்பு இல்லாது
வாழ்வுமுழுதும் கடந்துவிட்டோம்
உயிரில் கலந்த நட்பாக
இன்றுநாங்கள் உருவெடுத்தோம்
கடைசிவரை துணை இருப்போம்

பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே
முதுமை காலம் வந்ததுமே
நெஞ்சில் பயமும் சூழ்ந்தனவே
பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே
முதுமை காலம் வந்ததுமே
நெஞ்சில் பயமும் சூழ்ந்தனவே-
நெஞ்சும் பாலைபோல் ஆனதுவே
பரந்து விரிந்த உலகம் இன்று
சுருங்கித் தான் போனதுவே மிகவும்
சுருங்கித் தான் போனதுவே

இக்கவிதையின் காணொளியை என்னுடைய youtube channel "CHIRASI" https://youtu.be/2UX_ReJYD6I please copy this and paste in your browser காணவும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (16-Jan-23, 12:39 pm)
பார்வை : 56

மேலே