இசையென்னும் கவிதை - 11 காலமெல்லாம் நீ சுமந்தாய்

இசையென்னும் கவிதை 11
காலமெல்லாம் நீ சுமந்தாய்

ஆராரோ பாடி அன்று
ஆரம்பித்த வாழ்க்கையிது
யாராரோ வந்தபின்னும்
யாருமில்லை முடிவினிலே

நெஞ்சிக்குள்ளே நீ வளர்த்தாய்
மஞ்சத்தினை நீ மறந்தாய்
வஞ்சியவள் வந்தவுடன்
வாஞ்சையுடன் மறந்தனனே

காசு பணம் ஏதுமின்றி
காலமெல்லாம் நீ சுமந்தாய்
அந்தசெல்வம் வந்தபின்னும்
உனைசுமக்க யாருமிலையே

பெற்றமனம் பித்தடியோ
பிள்ளைமனம் கல்லடியோ
பார்த்தமனம் நோகுதடி
பாசம்விலை போனதடி

கலைமகளும் நீதானே
அலைமகளும் நீதானே
மலைமகளும் நீதானே
புரியலையே வாழ்ந்தபோது

இக்கவிதையினை பாடலாக youtube இணையதளத்தில் காண https://youtu.be/dzJ0g4rOMrw

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (17-Jun-18, 2:29 pm)
பார்வை : 290

மேலே