மழையே மழையே போய்விடு - ஓய்வின் நகைச்சுவை 197
மழையே மழையே போய்விடு
ஓய்வின் நகைச்சுவை: 197
மனைவி: ஏன்னா நீங்க சின்ன பிள்ளையா இருக்கறச்சே ப்ரொபெஷனல் கிரிக்கெட்டேர் ஆகியிருக்கலாம்!
கணவன்: இத்தனை வருஷத்திற்குப்பிறகு ஏண்டி இந்த ஞனோதயம்?
மனைவி: மழை வந்தா ஏன் விளையாடலைனு ஒருத்தரும் கேட்கப்போறதில்லை. சம்பளத்தை யாரும் பிடிக்கப்போவறதுமில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன் மட்டும் லோ லோனு புலம்புவன். எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கலாம் பாருங்கோ
கணவன்: இப்போ நீ என்னடி சொல்லவாறே?
மனைவி: 3 மணியிலிருந்து இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்- கோனு