10 என்ன தவம் செய்தோனோ - தாத்தா பேத்தி தாலாட்டு - எண் 10

10 என்ன தவம் செய்தோனோ - தாத்தா பேத்தி தாலாட்டு - எண் 10

என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு - நான்
என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு -
செய்த தர்மம் தேவதையாய்
மார்பில் சாய்ந்து சிரிக்குதம்மா - நான்
செய்த தர்மம் தேவதையாய்
மார்பில் சாய்ந்து சிரிக்குதம்மா - எந்தன்
மார்பில் சாய்ந்து சிரிக்குதம்மா
என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு
நான் என்ன தவம் செய்தோனோ

பிறர்க்கு செய்த உதவியெல்லாம்
குழந்தைவடிவில் தவழுதம்மா - - நான்
பிறர்க்கு செய்த உதவியெல்லாம்
குழந்தைவடிவில் தவழுதம்மா -
பிறவிபலனை அடைந்துவிட்டேன்
நெஞ்சினிலே உதைகையிலே - நான்
பிறவிபலனை அடைந்துவிட்டேன்
நெஞ்சினிலே உதைகையிலே - எந்தன்
நெஞ்சினிலே உதைகையிலே
நான் என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு
நான் என்ன தவம் செய்தோனோ

கங்கையிலே குளித்தசுகம்
பிஞ்சு கரத்தால் தீண்டும்போ து - நான்
கங்கையிலே குளித்தசுகம்
பிஞ்சு கரத்தால் தீண்டும்போ து
பாலைவனமும் சோலையானது
உன்வரவின் மகிமையிலே - எந்தன்
பாலைவனமும் சோலையானது
உன்வரவின் மகிமையிலே
என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு
நான் என்ன தவம் செய்தோனோ

விண்மீன்கள் சிதறுதடி
உன் சிரிப்பின் அழகினிலே - வானில்
விண்மீன்கள் சிதறுதடி
உன்சிரிப்பின் அழகினிலே
இன்பகீதம் ஒலிக்குதடி
உன் குரலின் இனிமையிலே - எந்நாளும்
இன்பகீதம் ஒலிக்குதடி
உன் குரலின் இனிமையிலே - எந்நாளும்

என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு -
செய்த தர்மம் தேவதையாய்
கரத்தினிலே சிரிக்குதம்மா - நான்
செய்த தர்மம் தேவதையாய்
கரத்தினிலே சிரிக்குதம்மா - எனை
பார்த்து சிரிக்குதாம்மா
என்ன தவம் செய்தோனோ
உன்னை மார்பில் சுமப்பதற்கு
நான் என்ன தவம் செய்தோனோ

இந்த பாடலின் காணொளி காண யூ டூப் இணையதளம் லிங்க் https://youtu.be/AX7FgEE8nTQ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (25-Oct-21, 6:45 pm)
பார்வை : 318

மேலே