joதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : joதி |
இடம் | : விருதுநகர் |
பிறந்த தேதி | : 19-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 18 |
வாய்ப்பு வாழ்வில்
ஒரு முறை மட்டுமே வரும்
அதை சரியாக உபயோகித்தால்
உலகம் உன்னை மதிக்கும்
இல்லையேல் வார்த்தைகளில்
உன் மதியை மிதிக்கும்......
ஆழ்கடலில் இருந்து
கரைக்கு வந்தால் தான்
வெற்றி
என்று இல்லை அங்கு
எதிர்நீச்சல்
போட நினைப்பதே வெற்றி தான்.....
மற்றவர் காலில் நான் விழும் போது
என் சிரம் இம்மண்ணையே
நோக்கி கொண்டு இருக்கிறது
ஆனால்
ஆசிர்வதிபவர் சிரமோ என் முதுகை
நோக்கி கொண்டு இருக்கிறது
ஆசீர்வதமோ ஆத்திரமோ
அதை முகத்திலே காட்ட வேண்டும்
என் தமிழ் அன்னையிடம் கற்ற
முதல் பாடம்
எனவே
நான் மற்றவர் காலில் விழும் போது எனக்கும் அசிங்கம் இல்லை
என் காலில் மற்றவரை விழ
வைப்பதே அசிங்கம்
****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!
****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !
****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!
****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !
****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!
புகுந்த வீட்டில் ஏன் ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றது....???
உங்கள் பார்வையில் ஒரு மாமியார்-மருமகள் எவ்வாறு இருக்க வேண்டும்....??
உங்களது கருத்துக்களை பகிருங்கள் தோழர்களே.....!!
தற்போது விவகாரத்துக்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.......??
உங்கள் கண்ணோட்டத்தில்.....
இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........
காதல் செய்ய
பணம் தேவையில்லை...!
காதல் கொள்ள
அழகு தேவையில்லை...!
காதல் ஏற்க
குணம் தேவையில்லை...!
காதல் கவிதை எழுத
கல்வி தேவையில்லை...!
கண்ணீர் சிந்துகையில்
அதனைத் துடைக்க
கைகுட்டை இருந்தால் போதும்...!
பிரிந்திடுவோம் - என
தெரிந்திருந்தும்....
மலரைச் சுமக்க
மறுப்பதில்லை செடி...!
பிரிவதற்காக
காதலிப்பதில்லை எவரும்...
இணை பிரியாமல்
இருப்பதற்காகத்தான்
விரும்புகிறார்கள் ஒவ்வொருவரும்...!
சூழ்நிலைக்கு கைதியாகி
உடைந்து போகிறார்கள்...!
பிரியும் பூவாக இல்லாமல்
சுமக்கும் செடியாக இருப்பதுதானே...
உண்மையான காதல்...!
சீதையின் பொறுமையையும்
கண்ணகியின் கற்பையும்
ராதையின் அழகையும்
ஒரு சேர பெற்றவளே
நீ தான் எம் தாய் மண்ணின்
தமிழ் மகளோ........
பலவகையான வண்ணச் சாயங்கள்
பூசிக்கொண்டு
பாவாடையில் பணிக்குச் செல்லும்
பட்டணத்து பத்மினிக்களுக்கு
நடுவில்
மஞ்சள் நீராடி நெற்றி திலகமிட்டு
ஒற்றை சடையில்
ஒரு சரம் மதுரை மல்லியை
வைத்து கொண்டு
ஆத்துகாரனை பணிக்கு அனுப்பும்
அழகியே
நீ தான் எம் தமிழ் மகளின்
தலை மகளோ..........
நீ எம் தமிழ் மகள்
தலை மகள்
மட்டும்
எனது அன்பின் சுவாசகாற்றுக்கு
கிளைகளை போன்று அசைந்தும்
எனது கோப புயலுக்கு
வேர்களை போன்று அசையாமலும்
என் வாழ்வில் என்றும்
எனக்கு நிழலாய் இருப்பவளே
சேலையில் பார்த்தால் எனது
"அன்னையாகவும்"
சுடிதாரில் பார்த்தால் எனது
"தோழியாகவும்"
பாவாடை தாவணியில் பார்த்தால் எனது
"கனவு கன்னியாகவும்"
ஒளிர்பவளே.......
இன்றும் மயக்கத்தில்
இருக்கிறேனடி
உனது அன்பு கலந்த போதையில்....
முத்தத்திற்கு ஏங்க வைக்கும்