krish vathani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : krish vathani |
இடம் | : srilanka |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 197 |
புள்ளி | : 42 |
ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டு அதற்கு காரணம் அவளது கவர்சியான உடை தான் காரணம் என்கிறார்கள் ஆண்கள்...இது சரியான கருத்தா அல்லது தம் தவறை நியாயப்படுத்துவதற்காக அவ்வாறானதொரு முகமூடியின் பின்னே தம்மை ஒளித்து கொள்கிறார்களா.....??
உங்கள் பார்வையில் இதற்கான கருத்துக்களை என்னுடன் பகிருங்கள் தோழர்களே.........!!
தற்போது விவகாரத்துக்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.......??
உங்கள் கண்ணோட்டத்தில்.....
வையகத்தில் மலர்ந்த
வண்ண மலர்களின்
வாழ்க்கை வரிகள்..
மரண எல்லையை
மௌனமாய் குறிக்கும்
புள்ளிகளின் சேர்க்கை
காயம் பட்டாலும்
கணல் கொண்டு சுட்டாலும்
கரையாத காலனின்
கல்வெட்டு...
ஜோசிய காரனுக்கு
யோசனை சொல்லும்
முழுமைப்பெறாத கோடுகள்
இறைவன்
நாம் இன்னல்பெற
இட்டுச் சென்ற
கீறல்கள்
சொந்தக்காரனே
அறியமுடியாத
சொல் வரிசைகள்
பிரம்மன் தொடங்கி
விஷ்ணு தொடர்ந்து
சிவன் முடிக்கும்....
மர்மக் கலை..
அடுத்தவர் வாழ்வில்
அடிவைக்கும் முன்
சிந்தித்து செயற்படாது - பின்
மனதார மன்னிப்பு வேண்டிடும்
தாங்கள் காரணங்கள் - என்றுமே
ரணத்திற்கு மருந்திடா...
புறக்கணிப்பின் வேதனை
தாங்கள் அறியததா?
காரணங்கள் எதுவானால் தான் என்ன?
இத்தவறுகள் இனி தொடரக்கூடாதவை தான்
தெரிவிக்கப்படததினாலேயே
பல தவறுகள் என்றுமே தப்புக்களாய்.....
தாய்க்கு தனயன் அழகு
தந்தைக்கு மகள் அழகு - ஆனால்
தமிழ் மக்களுக்கோ.....
அவர்களின் தாயே!
உலகழகு
மகனே ,
உயில் எழுத
பணமில்லை ....
உயிர் என்
உடலிலிருந்து பிரிந்த பின்
சடலத்தை
சங்கு ஊதி
மலர் வளையமிட்டு
மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க
சாம்பலை கரைக்க
சௌண்டி கழிக்க
செலவுகளுக்கு
சேமிப்பாய் ஒரு தொகையை
சிவப்பு பெட்டியில்
சேர்த்து வைத்து உள்ளேன்
மனம்
பணம் இல்லாமலே எரிந்து முடிந்தது
உடல் எரிய இத்தொகையை
உனக்காக சேமித்தேன் !
சொத்து சேர்த்து வைக்காததால்
செலவு வைக்காமல் செல்ல எண்ணுகின்றேன் !
தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் .
வறுமையால்
பாரமாய் வாழ்ந்த உனக்கு
இறப்பிலாவது பெரும் பாரமில்லாமல்
பிரிய விரும்பி
பருவம் பார்த்து வருவதில்லை
*****நட்பு *******
மனமும் குணமும் இணைவது தான்
*****நட்பு ******
உன் விழி
விளிம்புகளில் என்னுயிரை
விட்டுச் செல்கிறேன்..
மேகங்கள் போல
தடயங்கள் இல்லாமலே
விட்டுச் செல்கிறேன்..
வரிகளே இல்லாத
மௌன கவிதயாய்
விட்டுச் செல்கிறேன்..
உண்ண உணவு
உடுத்த உடை
இருக்க இடம்
இவைகளுள்
எவையுமின்றி
அகதியாய் நீ
அலையினும்
அகிலமே உன்னை
இகழினும்
உனக்கு நீ
உண்மையாய்
இருப்பின்
உன் வாழ்க்கை
அழகானதே.
ஓர் அழகிய பூவைக் கண்ட மனிதர்
அதை கையாளும் விதமோ பல....
வாசனையில் மயங்கி
பறித்து முகர்ந்து எறிவர்,
அதன் அழகில் மயங்கி
தன்னை அழகாக்க தலையில் சூடுவர்,
சம்பிரதாயம் என கூறி
பறித்து பாழ்படுத்துவர்,
இதழ் பறித்து
உண்டு மகில்பவரும் உளர்,
ஒரு சிலரே அழகாய்
அதன் போக்கில் ரசித்து மகிழ்வார்
ஓர் பூவையை காணும் விதம்
பலவாக மாறும்போது மட்டும்
கடவுளை குறை கூறும்
விந்தை மனிதரே!
பூவும் பூவையும் அவன் படைப்பில்
சமனாகும் போது....
உன் கேள்வியின் அர்த்தம் தான்....?
சோறு, பிட்டு, இட்லி
தோசை என நித்தமும் உண்டு
அலுத்து வெறுத்து
விதவிதமாய் சாப்பிட
ஏங்கி தவிப்பவர்களுக்குத்
தெரிவதில்லை.
பசி போக்கவே உணவுக்காக
ஏங்கும் பச்சிளம் பாலகர்கள் பலர்
இவ்வுலகில் உணவை காணவே
ஏங்கித் தவிக்கிறார்கள் என்று....
நினைவுகள்....
சுகமான சுவடுகள்...
சில தருணம்
சுகமான சுமைகள்...
பகலும் இரவுமாய்,
சோகமும் சந்தோசமுமாய்,
கலந்ததோர் கலவை....
சில தருணங்களை நினைக்கையில்.
"கண்ணீரில் கசிந்து வெளி வரும்
ஒரு உறவின் உருவம்"
கடந்து வந்த பாதையின் கால்தடங்கள்,
ஒவ்வொருவருக்குள்ளும் புதைக்கப்பட்ட
பழைய நினைவுகள் மரமாய் முளைத்திடும் தருணம்,
வலியால் வெளிவரும் கண்ணீர் துளிகள்...
கனவுக்கும் நினைவுக்கும் உள்ள பாலம்.,,
பேசிய வார்த்தைகள்...
பழகிய நாட்கள்...
என்று சிறிது சிறிதாய் சேகரித்த
நினைவு பொக்கிஷங்கள்..
.
"தென்றலாய் புன்னகைத்த தருணம்,
புயலாய் சோகம் வீசிய தருணம்,
என இருவண்ணமும் புதைக்