ரா நவீன் குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரா நவீன் குமார்
இடம்:  திருத்தணி
பிறந்த தேதி :  12-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Apr-2015
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  46

என் படைப்புகள்
ரா நவீன் குமார் செய்திகள்
ரா நவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 1:10 am

என்ன எழுதும் இந்த பேனா?
உதிராது திரியும் நெருப்பு மலரையா?
உடைந்தாலும் சிரிக்கும் வெள்ளை தட்டையா?
ஒற்றைப் புள்ளி உலகத்தையா?
காற்புள்ளியாக்கும் வால் நட்சத்திரத்தையா?
அற்புத ஒர் புள்ளியில்
அணுவொன்றில் நிற்கின்றேன்
காற்புள்ளி வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளியிட தவிக்கின்றேன்.
போராடும் தவிப்பை இன்று
ஈர கண்ணீர் தீரும்வரை
சிந்திவிடு தூரிகையோ...

மேலும்

சிறப்பு..தவிப்புக்கள் கொடுமையானது எதிலும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 9:32 am
ரா நவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2016 8:01 pm

திங்கள் முகமே திகட்டா அழகே பிரிந்தாயே
தீப சுடரே கண்ணின் ஒளி அணைத்தாயே

மனமோ பாலை ஆனதே
தினமோ மாலை ஆனதே

பாசப்பேரலை அடிக்க நீயெனை வெறுத்தாயே
பாசத்தின் வடிவம் நானென்ன சொன்னதை மறந்தாயே

திசைகள் மறந்து நிற்கின்றேன்
எனையே சுமந்து நடக்கிறேன்

மலர்களை நான் பறித்த போதெல்லாம் வலியென தடுத்துவிட்டாய்
மனதினையே பறித்து செல்கின்றாய், வலியென உணரவில்லையா?

காதல் வரம் கேட்டேன், நீயும் காற்றாய் நுழைவேன் என்றாய்,
காற்றும் வற்றிடுமோ? கானல் நீராய் கையில் கிடைக்காமல் மறைந்திடுமோ?

கண்ணீர் கடலிலே மிதக்க வேண்டுமென அன்றே ஏன் சொல்லவில்லை
கண்ணீர் கடலில் காதல் ஓடத்தில் பயணித்தால் தவறுமில்லை

மேலும்

அழகிய சொல்லாடல் 11-Sep-2016 11:38 pm
ரா நவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2016 7:48 am

இலை
உலகிற்கு பசுமை யிலை,
கண்களுக்கு குளிர்ச்சி யிலை,
நமக்கு சுவாச மிலை,
கனிகளுக்கு ஆதர விலை,
பூக்களுக்கு ஆதார மிலை,
தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கை யிலை,
சைவ உணவு மிலை,
இயற்கை குடையு மிலை,
குளிர்ந்த நிழலு மிலை,
மண்ணுக்கு வளமை யிலை,
மண்ணுக்கு நிலைத்தன்மை யிலை,
மரத்திற்கு முழுமை யிலை!!!!
****************************
இலையே?
நீ மழையோடு,
என்ன பேசுவாய் ?
எப்படி பேசுவாய்?

கைகளை அசைத்து
அசைத்து பேசுவாயோ?
தொட்டு முத்தமிட்டு
பேசுவாயோ ?

மழையின் காதலையும்
என்னென்று சொல்வேன் ?

மழை அன்பை கூடைகூடையாய் கொட்ட,
நீ மெய்சிலிர்த்து நனைந்து நிற்க,
உன்னை தீண்டாத துளிகளோ,

மேலும்

இலைகளின் அசைவில் தொலைந்த மனதின் காற்றாடிகள் 23-Aug-2016 8:08 am
ரா நவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2016 6:39 pm

ஆத்மாவே!!!
நியாயத்திற்காக அழவில்லை?
தர்மத்திற்காக அழவில்லை?
நீதிக்காகவும் அழவில்லை?
சோகத்திற்காக ஏன்
கூர்மை கண்ணீர்
சிந்துகிறாய்?
ஆசை கொள்ளவேண்டிய விடத்தில்
கொண்டாய் மோகத்தை!!!
கொண்ட மோகத்தின் மேல்
மீண்டும் ஆசை கொண்டாய்!!!
எனில் சிந்துவதும்,
மோக ஆசையின்
கூர்மை கண்ணீர் தானோ?

மேலும்

உண்மைதான். இன்று கண்கள் பெரும்பாலும் அழுவது இதனால் தான்... வாழ்த்துக்கள் .... 17-Aug-2016 8:43 am
சிறந்த படைப்பு.... 17-Aug-2016 7:16 am
ரா நவீன் குமார் - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 7:40 am

இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........

மேலும்

காதல் என்பது அவரவர் உரிமை எனலாம். ஆனால் காதலில் காதலிக்கோ,காதலனுக்கோ த்ரோகம் இல்லாமல் இருக்க வேண்டும்…இது பெற்றோருக்கு செய்யும் த்ரோகம் அல்ல…எனினும் அவர்கள் சம்மத்ததோடு திருமணம் செய்து கொள்ள மேலும் சிறப்பு. 25-Sep-2018 4:28 pm
அன்பிற்கு சட்டங்கள் ஏது, நாம் அனைவரும் ஒரு உண்மையை ஆராய்ந்து பார்க்க மறந்துவிட்டோம். என்னவென்றால், எந்த ஒரு பிள்ளையும் தன் பெற்றோர்க்கு துரோகம் இளைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்க வேண்டு என்று பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள். ஆக தங்களால் இயலாத பட்சத்திற்கு ஒருவருக்கொருவர் சங்கடமான சூழலை கொடுத்து விடுகிறோம். இப்படி ஒரு சூழல் அமையும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை தன் காதலை தன் பெற்றோரிடம் சொல்ல வரும்போது அதன் மனது படும் பாடு அதற்க்கு மட்டுமே தெரியும், அதே நேரத்தில் பெற்றோரின் நிலையையும் அறிவர். வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்க போவதை யாரும் விரும்பி நாடுவது இல்லை. ஆனால் இத்தகைய சங்கடமான சூழலை சமாளிக்கும் மனப்பாங்கு இருவருக்கும் வேண்டும். எப்படி பட்ட சங்கடமான சூழலையும் சுமூகமாக மாற்றும் எண்ணம் அனைவருக்கும் வேண்டும். அது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமையும் கூட. நான் பிள்ளைகள் செய்யும் தவறை நியாயப்படுத்துவதற்காக இல்லை, மாறாக தன்னை மீறி தவறு செய்து விடுகின்ற பிள்ளைகளின் இக்கட்டான சூழலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பிள்ளைகளின் காதலை அவமானம், தோல்வி என்று நினையாமல் "என் பிள்ளையின் மனதிற்கு பிடித்த இடத்தில் நான் திருமணம் செய்து வைத்தேன்" என்று அனைவரிடத்திலும் பெருமையாக கூறிக்கொள்ள வேண்டும்(முடியாவிட்டாலும்). அதே நேரத்தில் பெற்றோர் தான் தேர்ந்தெடுத்த ஒருவரை வெறுத்து விட கூடாது என்பதிலும் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும். முடிவு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சகித்து நடந்துகொள்ள வேண்டும். 29-Sep-2016 7:41 pm
துரோகம் தான், ஏன்/ தன்பிள்ளை தனக்கு மட்டும் சொந்தம் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள் தங்களுக்கு தெரியாமல் எதுவும்செய்ய மாட்டார்களென்று பிள்ளைகள்மீது முழுநம்பிக்கை அன்பு gவைத்துச்செல்லமாக வளர்க்கிறார்கள் , ஆனால் ஒருசில பிள்ளைகள் துணிச்சல் மிக்கவர்களாகி தன் எண்ணப் படி காதலிக்க தொடங்கி விடுகிறார்கள் ,காதலிப்பது தப்பு இல்லை , நம் பெற்றோர் இதற்கு சம்மதிப்பார்களா அவர்களை மனம் வருந்த பண்ணலாமா /உண்மையான அன்பும் அக்கறையும் பெற்றோர் மீது இருந்தால் நிச்சயமாக பிள்ளைகள் தன் அற்ப ஆசைக்கும் காதலுக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள் 31-Aug-2016 1:57 pm
மிக்க நன்றி தோழி..... 28-Aug-2016 2:26 pm
ரா நவீன் குமார் - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2016 6:48 am

நாம் மேற்கத்தேய கலாசாரங்களை நாகரீகம் என நினைத்து அவர்களது மொழி, நடை, உடை பாவணைகளை துளியும் பிசகாது பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த உலகத்துக்கு நாகரீகத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்தான் என்று மேடைகளிலும் ஊடகங்களிலும் பீத்திக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது..

இதே வேளை மேற்கத்தேயர்கள் எமது கலாசாரத்தை பின்பற்றுவதுமில்லை அதனைப் போ ற்றிப்புகழ்வதுமில்லை!!

இதற்குக் காரணம் நாம் எமது கலாசாரத்தை மறந்ததாக இருக்கலாமா?அல்லது எமது கலாசாரம் நவீன உலகத்திற்கு பொருந்தாததா? நடைமுறைக்குப் பொருத்தமற்றதா?

மேலும்

இருக்கலாம் 29-Jul-2016 5:33 am
இந்தியர்களாகிய நாம் மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கு முக்கியமான காரணம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் நம்மீது நடத்தப்பட்ட கலாச்சாரத் திணிப்பு.ஏறத்தாழ மூன்று தலைமுறைகள் மாசுபட்டு விட்ட பின், நமக்குள் தொலைந்து விட்ட கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய மீள்பார்வை நம்மிடையே இல்லாமல் போனதுதான் முக்கிய காரணம். 28-Jul-2016 2:01 pm
கணினி எழுத்துப் பிழை ; திருத்தம் அன்னப் பறவை போல மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள நல்லதை எடுத்துக்கொள்வது போற்றுதற்குரிய கருத்து சிந்தனைக்கு விருந்து . 25-Jul-2016 5:45 am
அன்னாய் பறவை போல மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள நல்லதை எடுத்துக்கொள்வது தமிழ் கலாச்சாராம் 25-Jul-2016 5:42 am
ரா நவீன் குமார் - ரா நவீன் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2016 3:54 pm

முற்றத்தில்
எமைக்காண
வந்த சுற்றமே,

வெம்மையும்
வெண்மையும்
கடனாய்
பெற்ற வட்டமே,

தென்னை
இளங்கீற்றோடு
விளையாடும்
தென்றலோடு
மேகத்தேரில்
பவனிவரும் திங்களே.

ஓர் இரவு
என் வீட்டின்
வாசல் வருவாயோ?

வந்து
மனதால்
கேட்கும்
கடன் தருவாயோ?

வெண்மை
வெம்மையால்
மேகங்களை ஒளிர்கூட்டி

இருளின்
ஆணவத்திற்க்கு
கேள்வி
எழுப்பும் நாயகா.

என் வாழ்வின்
கருமை
இருளையும் போக்கவா!!!

கருமை
கடைந்து
பொழியும்
மேகம் வேண்டும்

கருமைக்கு
அர்த்தம்
கூறும் மோக
கூந்தல் வேண்டும்

மெலனின்
கூடியதல்
கூடிப்போன
கருமை
உமக்கு வேண்டாம்.

மொழியை
மாற்ற முடி

மேலும்

நன்றி தோழர்களே.... :-) 11-Mar-2016 4:18 pm
வலிமிகுந்த வரிகள்... வாழ்த்துக்கள்... 04-Mar-2016 2:13 am
உண்மையில் கவிதையின் ஒவ்வொரு வரியிலும் சிந்தையின் உயிரோட்டம் இருக்கிறது 25-Feb-2016 5:10 pm
கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து அளித்த படைப்பில் (public) Gopalakrishnan Pachamuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Feb-2016 10:17 pm

ஒரு ஓடும் பேருந்து....
ஒத்த வயதுடைய முன்பருவத்து இளைஞர்கள்...
அருகருகே ஈரிருக்கை...

அவன் நல்ல உடையில்..
இவன் உடையில்...

அவன் ஸ்மார்ட் போனில்..
இவன் களைப்புடன் உறக்கத்தில்..

அவன் கல்லூரி முடிந்து போகிறான்..
இவன் லாரி பட்டறை வேலை முடிந்து போகிறான்..

அவனுக்கு வறுமை தூரத்து சொந்தம்..
இவனுக்கு உடன் பிறப்பு...

அவன் எந்த சாமியை கும்பிட்டானாே..
இவன் எந்த சாமியை விட்டுவிட்டானோ தெரியவில்லை...

ஒன்று மட்டும் நிச்சயம்.!

அவன் வளர்க்கப்படுகிறான்..!!!
இவன் செதுக்கப்படுகிறான்.!!!!

மேலும்

நன்றி சர்பான். தோழமையின் கருத்துக்கு நன்றிகள். 01-Mar-2016 4:47 am
கருத்து கேட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி தோழா. 01-Mar-2016 4:45 am
கவிதை பல கோணங்களில் உயிரோட்டம் நிறைந்ததாக காணப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 11:07 pm
//அவன் எந்த சாமியை கும்பிட்டானாே.. இவன் எந்த சாமியை விட்டுவிட்டானோ தெரியவில்லை... ஒன்று மட்டும் நிச்சயம்.! அவன் வளர்க்கப்படுகிறான்..!!! இவன் செதுக்கப்படுகிறான்.!!!! // இயற்கையான நெஞ்சை துளைக்கும் வரிகள்.அருமை தோழா. 29-Feb-2016 11:01 pm
ரா நவீன் குமார் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2015 5:16 pm

நெஞ்சளவு நீரினிலே
-----நேற்றுபிறந்த பிஞ்சொன்று
கெஞ்சிஉணவு கேட்கதடா
-----கல்மனதும் கரையுதடா

நாளைமலரும் மொட்டொன்று
-----நெடியநீரில் நிற்குதடா
நாளையேனும் விடியுமென்று
-----நம்பிநீரில் நனையுதடா

பசியினிலே துடிதுடித்து
-----பார்க்குமெங்கும் நீர்வரத்து
படுத்துறங்க இடமின்றி
-----பாடுபடும் ஜனக்கூட்டம்

சோற்றுக்குக் கையேந்தி
-----சோகத்தை மனமேந்தி
நாற்றெனவே நீர்பெருக்கில்
-----நடுநடுங்கி நிற்குதடா

தன்பசியைப் போக்கிடவே
-----தட்டேந்தி நிற்கவில்லை
அன்னைதந்தை பசிபோக்க
-----அடுத்தவரை நாடுதடா

நெஞ்சமெலாம் குமுறுதடா
-----நீதிமண்ணில் அழி

மேலும்

mikka nanri 09-Dec-2015 6:09 am
பிஞ்சுமுகம் பார்த்தேனும் ----பேய்மழையே நின்றுவிடு. அருமை . மிக அருமை . 08-Dec-2015 6:11 am
நன்றி நண்பா 06-Dec-2015 6:46 pm
நன்றி 06-Dec-2015 6:45 pm
ரா நவீன் குமார் - ரா நவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2015 9:42 pm

நீ!!!
முந்தானைக் கையில் கொள்ள,
----வெட்கம் முந்தி நடக்க,
கால்கள் பிந்தி இருக்க,
----நினைவோ அலைந்து திரிய,

நான்,
நிகரில்லாத உந்தன் பின்னே,
----வந்தேன் எந்தன் கண்ணே,
காணும் வேட்கை முன்னே,
----கரையவில்லை இல்லை பெண்ணே!!!!

நாம்,
கதைகள் பேசும் கண்கள்,
----கானம் பாடும் வளையல்,
கரைந்து போனேன் விழியில்,
----உறவாக உன் மடியில்!!!!

உதிர அணுக்கள் நீயாய்!
உதிரும் வார்த்தையுன் பெயராய்!!
உடைந்த கண்ணாடி துகளாய்!
உருவங்கள் அத்துணையும் அவளாய்!!

கரையோடு பயணிக்கும் காற்று கணம்
----திரும்பி பார்த்தது என்னே?
பெண்ணே, கரையோடு கால்கள் உலவ,
---- ஜதிகளின் ஒலியே கண்ணே!!!

கடன் கேட்க

மேலும்

நன்றி தோழரே 04-Dec-2015 11:38 am
ஒரு பாட்டு போலவே நல்ல ஜதியுடன் இருக்கிறது... அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 6:39 pm
நன்றி தோழரே... வரவுக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி 01-Dec-2015 8:35 am
sila itankalil sol viichsu mikavum alku 30-Nov-2015 10:18 pm
ரா நவீன் குமார் - ரா நவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2015 11:07 pm

கள்வனே
நினைவை திருடி இருந்தால்
மனதிடம் கேட்டிருப்பேன், திருடியது
என்னை என்றால் யாரிடம்
நான் கேட்பேன் உன்னையன்றி...

ஆருயிரே
பஞ்சபூத உடலில் குடிகொண்ட
என்னுயிரை ஓருயிராய் உருவாக்கி
உருஆக்கி உடல் இயக்கம்
தந்தவனும் நீயன்றோ...

தங்கமே!!!
உருக்கி உரு கொடுத்தால்
சிரிக்கும் தங்கமல்லாமல் உனை
கண்டாலே சிரிக்கும் தங்கமாக்கினாய்
ஏற்ப்பாயே என் தங்கமே...

செல்லமே...
கொஞ்சி பேச ஆசையில்லையோ
கொஞ்சம் பார்க்க நேரமில்லையோ
கொட்டிச் செல்ல கோபமில்லையோ
எனை தூக்கிச் செல்ல துன்பமென்னவோ!!!

ஓருயிரே
ஓயாமல் வென்று விட்டாய்
மனதை, ஊடலுடன் நின்றுவிட்டாய்
எதிரில், வந்து உயிரென
கலந்துவிடு உடலில்

மேலும்

ரா நவீன் குமார் - ரா நவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2015 11:44 am

சந்தனம் மணக்க திரும்பினேன்
நடந்து சென்றவள் என்னவள்
கண் பார்வையிலே என்னை
விழுங்கிடுவாளோ என்ன, அவள்...

உதடுகள் பேசி பேசி கலைத்து போகவில்லை
காற்று சுமந்து சுமந்து அலுத்துப் போகவில்லை
நாவும் சுழன்று சுழன்று நின்று போகவில்லை
வார்த்தைகள் கொட்டக் கொட்ட தீர்ந்துப் போகவில்லை

பேசிக்கொண்டே வானத்தை கடந்து
சிறம் நிலவைத்தொட, கரம்
மெல்லிய கரத்தைத்தொட மனதோடு
மிதந்தது இருவுடல்கள் ஒன்றாய்...

கடல்போல் மனம் ஆட
மூங்கிலும் கவி பாட
முனகல் ஸ்ருதி கூட
விழித்தேன் வழி தேடி...

இரா நவீன் குமார்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .
user photo

krish vathani

srilanka
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
user photo

krish vathani

srilanka
தாரகை

தாரகை

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

user photo

ஷாமினி அகஸ்டின்

ஷாமினி அகஸ்டின்

கன்னியாகுமரி
மேலே