முத்துகிருஷ்ணன்கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துகிருஷ்ணன்கண்ணன்
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  15-Aug-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Feb-2016
பார்த்தவர்கள்:  475
புள்ளி:  49

என்னைப் பற்றி...

மனிதனாக வாழ மனதோடு போராடிக் கொண்டிருப்பவன்.

என் படைப்புகள்
முத்துகிருஷ்ணன்கண்ணன் செய்திகள்

      நான் பூ
  --------------------
அந்திக்கு முந்திடுவேன் - முதலில்
அகிலத்தைப் பார்த்திடுவேன்
திசை  நிரம்ப மனம் பரப்பி
உங்கள் சிந்தை கவர்ந்திடுவேன்
சுற்றத்தோடு வாழும் கலை
கற்றுக் கொடுத்துடுவேன்.
உங்கள் விழிகளுக்கு விருந்தாக
வழியெங்கும் பூத்திடுவேன்
உதிர்ந்தே விழுந்தாலும்
உங்கள் பாதம் தாங்கிடுவேன்.
இறைவன் தோளில் உறைந்திடுவேன்
பூவையர் குழலில் நிறைந்திடுவேன்
தலை மீதேறி அமர்ந்தாலும்
தலைக்கனம் இன்றி வாழ்ந்திடுவேன்
பூத்தாலும் மலராய்ப் பூத்திடுவேன்
புதைந்தாலும் விதையாய்  முளைத்திடுவேன்
அமைதிக்கும் அழகுக்கும்
அகிலம் சொல்லும் பொருளாவேன்.
காலை மலர்ந்து மாலை உதிரும்
ஒருநாள் வாழ்வெனினும்
மறுநாளும் பூத்திடுவேன் பூவாகவே.
மதித்தாலும் மிதித்தாலும்
மனம்தளரா குணத்துடனே
மறுபடியும் பிறந்திடுவேன் மலராகவே!!!

அரும்பாய் மொட்டாய்  மொக்குள நனையாய்
முகையாய் போதுவாய் முகிழாய் மகிழ்வாய்
மலராய் அலராய் அதனுள் மணமாய்
வருவாய் வெற்றியைத் தருவாய் தினமே!!!



மேலும்

மௌனமாய்ப்  பூக்கின்ற
மலர்களாய்  - நாங்கள்
நித்தம் நித்தம்
புத்தம் புதிதாய் மலருகின்றோம்.
அவை
தன்னலம் கருதாமல்
திசை நிரப்புகின்ற
நறுமணம் போல
நாங்களும்
சுயநலம் விடுத்து
பொதுநலம் பேணுகின்றோம்.
பூக்கள் மலர்ந்து
புன்னகை பூப்பதற்க்காய்
நிலவும் கதிரும்
இரவு பகலாய்
உதவி செய்வதை போல
நல்லோரின் துணையால்
நலம் பேணி வாழுகின்றோம்
ஒரு மலர் மாலையில்
விதம் விதமாய்
பல மலர்கள்
இருப்பதை போல
எங்கள் மனமலர்கள்
பல கொண்டு - இந்த
நூல் மலரை தொடுத்து - உங்கள்
கால் மலரில் வைக்கின்றோம்..
வாசித்து மகிழ்ந்திடுவீர் !!!







மேலும்

முத்துகிருஷ்ணன்கண்ணன் - முத்துகிருஷ்ணன்கண்ணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2024 1:16 pm

இறையும் செயலும்
-------------------------------
என்னைச் சுற்றியுள்ள
எல்லாரிடமும் ஓர்
இறைத் தன்மையைப்
பார்க்கிறேன் ...
எனவே
என் செயல்கள் யாவும்
எனக்கு
ஆன்மிகமாகவே தெரிகிறது.
மாமுகி .

மேலும்

முத்துகிருஷ்ணன்கண்ணன் - முத்துகிருஷ்ணன்கண்ணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2024 1:19 pm

நிலாவே நீ ...
-----------------
அந்த வானத்தில்
நிலவாய்
இருப்பதை விட

இந்த இருளில்
விளக்காய்
இருப்பதையே

என் மனம்
எப்போதும்
விரும்புகிறது .
மாமுகி .

மேலும்

நிலாவே நீ ...
-----------------
அந்த வானத்தில்
நிலவாய்
இருப்பதை விட

இந்த இருளில்
விளக்காய்
இருப்பதையே

என் மனம்
எப்போதும்
விரும்புகிறது .
மாமுகி .

மேலும்

இறையும் செயலும்
-------------------------------
என்னைச் சுற்றியுள்ள
எல்லாரிடமும் ஓர்
இறைத் தன்மையைப்
பார்க்கிறேன் ...
எனவே
என் செயல்கள் யாவும்
எனக்கு
ஆன்மிகமாகவே தெரிகிறது.
மாமுகி .

மேலும்

முத்துகிருஷ்ணன்கண்ணன் - முத்துகிருஷ்ணன்கண்ணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2024 1:34 pm

கானல் நீராய் ....
----------------------
அன்றொரு நாள் மனிதம் தழைக்க
பெண்மை இருந்தது ஆணிவேராய்
இன்றோ புல்லர் அதன் சிறப்பழிக்க
பெண்ணியம் போனது கானல் நீராய்

அன்று
புலிவிரட்ட முறமெடுத்த  வீரம்தான் பெண்மை !
'வரப்புயர' சொல்லித்தந்த ஞானம்தான் பெண்மை !
அகிலத்துக்கு அன்பு ஊட்டிய தாய்மைதான் பெண்மை !
அனைவருக்கும் உயிரூட்டிய தாயும் தான் பெண்மை !
உலகுக்காய் உயிர்துடிக்கும் உன்னதம்தான் பெண்மை !
பெண்மை இன்றி இல்லை இப்புவியில் ஆண்மை !

இன்றோ
போட்டிழந்தால் வீட்டுக்குள்ளே விதவையாய்....
தட்டிக்கேட்ட்டால் வீதிநடுவே வேசியாய் ....
பூனை நடையில் மேடைதனிலே அழகியாய் ....
புல்லர் கொள்ளவே கற்பைச் சுமந்த கருவியாய் ...

என்றும் .
ஊரும் உலகும் உற்றமும் சுற்றமும்
ஊனோடும் உயிரோடும் வாழக் காரணி பெண்மையே !
அதன் சீரும் சிறப்பும் கருத்தும் கனவும்
கானல் நீராய் போனதுதான் உண்மை ! உண்மையே !
மாமுகி.

மேலும்

முத்துகிருஷ்ணன்கண்ணன் - முத்துகிருஷ்ணன்கண்ணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2024 2:52 pm

செம்மொழியான தமிழ்மொழி
-----------------------------------------------
கல்லும் மண்ணும் தோன்றாத
காலத்தே தோன்றியது எங்கள் தமிழ்
சொல்லும் அணியும் குன்றாத
இலக்கணம் இயற்றியது எங்கள் தமிழ்
இயலிசை கூத்தாய் குறையாத
இனிமை படைத்தது எங்கள் தமிழ்
முதலிடை கடையாய் மங்காதசங்கம் அமைத்தது  எங்கள் தமிழ்
குறுசுவை குறளாய் அழியாத
வேதம் ஈன்றது எங்கள் தமிழ்
கரும்பினும் சுவையாய் உடையாத
சிலம்பு படைத்தது எங்கள் தமிழ்
பகைகெடு வீரமெனில் தளராத
வல்லினமாவது எங்கள் தமிழ்சுவைதரு காதலெனில் மலராக
மெல்லினமாவது எங்கள் தமிழ்
விதிசொலும் நீதியெனில் மாறாத
இடையினமாவது எங்கள் தமிழ்
களவையும் கற்பையும் அழியாத
காவியம் ஆக்கியது எங்கள் தமிழ்
உடலையும் உயிரையும் பிரியாத
உயிர்மெய் ஆக்கியது எங்கள் தமிழ்
வழிபடு இறைவனை அழைக்கத்திரு
வாசகம் தந்தது எங்கள் தமிழ்
எதிர்படு பகைவரை அழித்து பரணி
நாதம் முழங்கியது எங்கள் தமிழ்
அன்று தொல் காப்பியன் கண்டஇலக்கணப் பொன்மொழி எங்கள் தமிழ்
இன்று நல் தலைவர்கள் கண்டஇலக்கியச் செம்மொழி எங்கள் தமிழ்
காலம் வென்றெடுத்த அறவழி
சொன்ன மறைமொழி எங்கள் தமிழ்
ஞாலம் வென்றெடுக்கும் அறிவியல்
சொல்லும் புதுமொழி எங்கள் தமிழ்இல்லை என்பதை இல்லையாக்கும்
இனிய வாய்மொழி எங்கள் தமிழ்
உள்ள அன்பதை கொள்ளையாக்கும்
புதிய தாய்மொழி எங்கள் தமிழ்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
பேச்சும் மூச்சும் எங்கள் தமிழே
ஊனும் தமிழ் ஊன்  உறைந்து  வாழ்
உயிரும் தமிழ் அது எங்கள் தமிழே
மாமுகி

மேலும்

முத்துகிருஷ்ணன்கண்ணன் - வேஅழகேசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2016 12:00 pm

அ. பெற்றோர்களின் மன்னிப்பு & பாசம்
ஆ . மகளின் அன்பு முத்தம்
இ. கணவன், மனைவியின் பாசம்
ஈ . நட்பின் உண்மை
உ. தனிமை

மேலும்

மகளின் அன்பு முத்தம் ..... காரணம் நான் காணாத என் தாயின் சிறுவயதுப் பிம்பம் அவள் ........, 30-Jan-2017 9:37 pm
இதுபோன்ற பிரிவுகளை வகுக்காமல் (குடும்பத்திற்குள் கூட) இருக்கும் மதியை வளர்த்துக்கொள்வதுதான் நிம்மதி 28-Dec-2016 8:54 pm
பெற்றோர்களின் மன்னிப்பு & பாசம்... "தாயின் காலடியில் சுவனத்தைக் காணலாம்" 13-Dec-2016 1:02 pm
முத்துகிருஷ்ணன்கண்ணன் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 6:39 pm

இன்றைய காலகட்டத்தில்
இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390

மேலும்

இல்லறமே சிறந்தது.. 13-Dec-2016 1:59 pm
இல்லறம் கடந்த துறவறம். இல், துறவு இரண்டுமே அறங்கள். மனிதனின் வெவ்வேறு காலகட்டங்களில் கடைபிடிக்க வேண்டியவை. 11-Dec-2016 4:36 pm
Thuravaram manathuku amaithiyai alithaalum illarathaye naada nam manathu alaipaayum 08-Nov-2016 12:46 pm
இன்று துறவறம் என்பது போலியாகிவிட்டது.! இல்லறம் போராட்டம் நிறைந்தது. அதை சமாளித்து வெற்றியுடன் தொடர்வதில் ஒரு சுகம் இருக்கிறது. துறவறம் - ஒரு சுகமில்லா சுமை.! இல்லறம் - ஒரு சுகமான சுமை.! நீங்கள் எதை சுமக்க விரும்புவீர்கள்.? 03-Nov-2016 6:37 pm
முத்துகிருஷ்ணன்கண்ணன் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2016 4:34 pm

ஒருவனுக்கும் வெற்றியை தருவது அவனின் திறமையா?, அதிர்ஷ்டமா?அல்லது அறிவா???

மன்சூர் அலி
சவூதி அரேபியா
ரியாத்
00966-509150390

மேலும்

ஒரு குடம் திறமை, ஒரு படி அறிவு, இவற்றோடு ஒரு துளி அதிர்ஷ்டம். 11-Dec-2016 4:30 pm
ஒருவனுக்கு அறிவும் கூடவே திறமையும் இருந்து அதிஷ்டமும் இருந்தால் அவனின் வெற்றியை தடுக்க முடியாது நண்பரே !!!! 24-Nov-2016 4:15 pm
மஹாபாரதத்தில் குந்தி கண்ணனிடத்தில் கேட்டாள் - அறிவு, அழகு, ஆண்மை மற்றும் உன் ஸ்நேகிதம் உள்ள பாண்டவர்கள் ஏன் உணவு, உடை,தங்குமிடம் எல்லாவற்றிற்கும் கஷ்டப்படுகிறார்கள்? கண்ணன் பதில்: என்ன இருந்து என்ன? பாக்கியலக்ஷ்மியின் அனுக்கிரஹம் அவர்களுக்கு இல்லையே! என்ன செய்ய முடியும் அதிர்ஷ்டமே ஒருவனின் உயர்வுக்கும் சந்தோஷத்திற்கும் காரணம். 23-Nov-2016 6:54 pm
Thiramai thaan...thiramai irupavargalidam arivillaamal irukaathu,ivai irandum irukum idathil athirstam thaanaga vanthu serum. 08-Nov-2016 12:49 pm
முத்துகிருஷ்ணன்கண்ணன் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2016 4:43 pm

வாழ்க்கையில் சந்தோஷத்தை அதிகம் பெற போராடுவது ஆண்களா??இல்லை பெண்களா??

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390

மேலும்

பெண்கள் தான்.... ஆண்கள் மகிழ்ச்சியை தருபவர்கள். பெண்கள் அதை பெறுபவர்கள். நம் சமூகம் ஒரு ஆணின் தரத்தை மதிப்பிடுவதெல்லாம், அவன் தன தாயை, மனைவியை, மகளை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்து கொள்கிறான் என்பதை வைத்துதான். 11-Dec-2016 4:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

திவ்யா

திவ்யா

மலேசியா
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
மேலே