chandrasekharan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  chandrasekharan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Nov-2016
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
chandrasekharan செய்திகள்
chandrasekharan - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2016 11:39 am

இன்றைய சூழ் நிலையில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிக்கை வெளியிட்டது நியமானதா???இல்லை அநியாமானதா???

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390

மேலும்

அநியாயம் நிறைந்த நியாயம். அதாவது கள்ளப்பண ஒழிப்பு, கருப்புப்பண ஒழிப்பு, என்ற உயர்ந்த நோக்கங்களோடு.....ஆனால் சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் வந்த நியாயம். நான் முன்னேற்பாடுகள் என்று சொலவ்து பாமர மக்களின் அனுதின சிரமத்தை மட்டும் கருத்தில் கொண்டு அல்ல. நல்ல பணம், கருப்பு பண முதலைகளிடம் சென்று குவிந்து விட்ட அவலத்தையும் கருத்தில் கொண்டுதான். உயர்ந்த நோக்குடன் வந்த திட்டத்தின் பலவீனமான பக்கங்கள் தெரிகின்றன. ஆனாலும் ஒரு ஆறுதல். அதிரடி சோதனையில் கிடக்கின்ற தொகையில் பெரும்பான்மை சதவீதம் பழைய நோட்டுக்கள் இருப்பதுதான். முழுமையாக மாற்ற முடியவில்லை என்பதுதான். இத்திட்டத்தின் முழு வெற்றி என்பது பணமில்லா பரிமாற்றம், தங்கத்தின் மீது உச்சவரம்பு, கடுமையான நில உச்சவரம்பு, நில வணிகத்தில் கருப்புப்பண ஒழிப்பு, லஞ்ச, லாவண்ய குற்றங்களுக்கு கடுமையான தண்டனை என அடுத்தடுத்த படிகளை வெற்றிகரமாக கடக்கும் போதுதான் நமக்குத் தெரிய வரும். 11-Dec-2016 4:08 pm
நல்ல திட்டமே. ஆனால் நடைமுறை சிக்கல்களை மனதில் கொள்ளாது செய்துவிட்டார்கள். இதனால் கறுப்புப்பணம் வைத்துள்ள யாரும் சிரமம் அனுபவிக்கவில்லை. ஆனால் சாதாரண பிரஜைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனது எண்ணம்: RBI தலைவராக உள்ள திரு உர்ஜித் படேல் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளுக்கு பொருத்தமான திறமை இல்லாதவர். மாறாக திரு ரகுராம் ராஜன் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து அவரிடம் இந்த பொறுப்பை விட்டிருக்கலாம். அப்போது அவர் மிகவும் திறமையோடு திட்டமிட்டு இதை நல்ல முறையில் நடத்தி இருப்பார் 23-Nov-2016 7:05 pm
நியாயம் அநியாம் அப்படிலாம் இல்லை தப்பு அவங்க பிளான் மொத்தமும் தப்பு எவ்ளோவோ வழி இருக்கு அதையெல்லாம் ஒழுங்கா செஞ்சுருந்த இப்ப மக்கள் இவ்ளோ கஷ்ட படமா இருந்துருப்பாங்க 17-Nov-2016 11:44 am
கண்ணை மூடிக்கொண்டு மோடியை ஆதரிக்கும் அப்பாவி மோடி ஆதரவாளர்களுக்கு முகநூலில் (FACEBOOK) முன்னாள் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு செயலாளர் விடுத்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மோடிக்கு ஆதரவாக விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் அத்தனைபேரும் தலைதெறிக்க ஓடிவிட்டணர். 1) 500கோடிக்கு அதிகமாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கருப்புபண முதலைகளின் பெயர்களை இன்றுவரை வெளியிடாமல் அவர்களை தப்பிக்கவைத்துக்கொண்டிருக்கும் மோடியா கருப்புபணத்தை ஒழிக்கப்போகிறார்? 2) BJP ஆட்சியில் ஊழலே நடக்கவிடமாட்டேன் என்று பொய்யான சூளுரை விடுத்து ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டையே தலைகுனிய வைத்த மத்தியபிரதேச வியாபம் ஊழலில் ஆளும் BJP அரசின் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் ஊழல் ஆட்சியை காப்பாற்றிக்கொண்டிருக்கும் மோடியா கறுப்புபணத்தை மீட்பர்? இன்றுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான செளகான் தான் மத்தியபிரதேச CM. அவர் மீது எந்த நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லை. 3) RELIANCE அம்பானி இந்திய வங்கிகளை ஏமாற்றி திருப்பி செலுத்தாமல் இருக்கும் ஏறக்குறைய 50,000 கோடிக்கு அதிகமான கறுப்பு பணத்தை மீட்பதற்கு மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஒரு சிறு துறும்பைக்கூட அவர் நகர்த்தவில்லை 3) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெ வழக்கில் பொய்யான கணக்குப்பிழையில் விடுதலை பெற்றது சாமானிய குடிமகனுக்குகூட தெரியும். ஒரு பிரதமர் பொறுப்பில் உள்ளவர் நடுநிலை வகித்து இருக்கவேண்டும். ஆனால் ஜெ விடுதலை பெற்றதற்கு வாழ்த்து வேறு தெரிவித்தார். இவரா கறுப்பு பணம் பதுக்கியவர்களை பிடிப்பார் என்று நம்புகிறீர்கள்? 5) ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடன் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியகுடிமகனின் வங்கிகணக்கிலும் 15லட்சம் சேர்க்கப்படும் என்றார். சந்தேகம் இருந்தால் BJP ன் தேர்தல் அறிக்கையை படித்துப்பாருங்கள். ஒரு மாதத்தில் கறுப்பு பணத்தை மீட்பேண் என்று கூறிதாண் ஆட்சிக்கு வந்தார். எனக்கு தெரிந்து மோடி ஆட்சிக்கு வந்து 2வருடம் ஆகிறது. ஆனால் மோடிக்கு இன்னும் ஒரு மாதம் ஆகவில்லை போலும். PRESSMEET வைத்தால் பத்திரிக்கையாளர்கள் கேள்வி க்கணைகள் தொடுப்பார்கள் என்பதால் ஆட்சிபொறுப்பேற்று இண்று வரை பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயந்து ஒளிந்துஓடும் முதல் இந்திய பிரதமர். 6) கறுப்பு பண முதலைகளான மல்லையா ,லலித்மோடி, கல்மாடி etc. . . போன்றோர் சிறையில் இல்லை. அவர்கள் வெளிநாடுகளிலும் பண்ணைவீடுகளிலும் ஏகபோக வாழ்வு வாழ்ந்துகொன்டிருக்கிறார்கள். இவர்களை இண்டர்போல் REDALERT மூலம் 48மணிநேரத்தில் இந்தியா கொண்டுவந்து சிறையில் தள்ளலாம். கறுப்புபண மீட்பர் என்று கூறிக்கொள்பவர் முதலில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். க்ண்டிப்பாக சட்டத்தின் ஓட்டைகளை பயண்படுத்தி இவர்களை மோடிஜி தப்பிக்கவிடுவார் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை முகநூலில் ஒரு பதிவு. நியாயமான பதிவுதானோ.!!?? 14-Nov-2016 2:53 pm
chandrasekharan - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2016 4:34 pm

ஒருவனுக்கும் வெற்றியை தருவது அவனின் திறமையா?, அதிர்ஷ்டமா?அல்லது அறிவா???

மன்சூர் அலி
சவூதி அரேபியா
ரியாத்
00966-509150390

மேலும்

ஒரு குடம் திறமை, ஒரு படி அறிவு, இவற்றோடு ஒரு துளி அதிர்ஷ்டம். 11-Dec-2016 4:30 pm
ஒருவனுக்கு அறிவும் கூடவே திறமையும் இருந்து அதிஷ்டமும் இருந்தால் அவனின் வெற்றியை தடுக்க முடியாது நண்பரே !!!! 24-Nov-2016 4:15 pm
மஹாபாரதத்தில் குந்தி கண்ணனிடத்தில் கேட்டாள் - அறிவு, அழகு, ஆண்மை மற்றும் உன் ஸ்நேகிதம் உள்ள பாண்டவர்கள் ஏன் உணவு, உடை,தங்குமிடம் எல்லாவற்றிற்கும் கஷ்டப்படுகிறார்கள்? கண்ணன் பதில்: என்ன இருந்து என்ன? பாக்கியலக்ஷ்மியின் அனுக்கிரஹம் அவர்களுக்கு இல்லையே! என்ன செய்ய முடியும் அதிர்ஷ்டமே ஒருவனின் உயர்வுக்கும் சந்தோஷத்திற்கும் காரணம். 23-Nov-2016 6:54 pm
Thiramai thaan...thiramai irupavargalidam arivillaamal irukaathu,ivai irandum irukum idathil athirstam thaanaga vanthu serum. 08-Nov-2016 12:49 pm
கருத்துகள்

மேலே