மன்சூர் அலி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மன்சூர் அலி
இடம்:  சவுதி அரேபியா
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2014
பார்த்தவர்கள்:  1049
புள்ளி:  555

என் படைப்புகள்
மன்சூர் அலி செய்திகள்
மன்சூர் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2017 4:12 pm

முக நூலில் உன் முகம் கண்டு
முத்தங்கள் பல கொடுத்து

முடித்தாள் உன்னையே மணம்
முடிக்க வேண்டும் என நினைத்து

குறுந்தகவல் நான் அனுப்பி
உனக்காக வலை விரித்தேன்

மங்கலமாய் வாழ நான் ஆசைப்பட்டு
மனதார காதலித்தேன் உன்னை நான்

மணவறையில் கூட என்
மனதிற்கு தெரியவில்லை.

நீ மன நல பாதிக்க பட்டு இருப்பது
எனக்கு தெரியாமல் போனது..

மனைவியாய் உன்னை நான்
கரம் பிடித்து இப்போது உணர்கிறேன்

உன்னால் நானும் மன நிலை
பாதிக்க பட்டு இருக்கிறேன் என்பதை..

இப்போது நான் ஜல்லி கட்டு காளையாய்
எத்திசை நோக்கி போவது தெரியவில்லை.

மேலும்

மன்சூர் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2017 2:40 pm

தனசேகருக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதம் தான் இருக்கும்..
ஆனால் இப்படி ஒரு இடி இங்கே விழுந்த்திருக்க கூடாதுதான்...
என்ன செய்வது விதி இங்கே விளையாடி கொண்டு இருக்கிறது.
தனசேகரின் தாய் ஜானகி இதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு பட்டு படாமலும் சில விஷயங்களை அவ்வப்போது தொலைபேசி வழியாக சொல்லி கொண்டு இருக்கிறாள்...தன் கணவனின் பதிலும் எல்லாம் போக போக சரியாகும் என்றுதான் ஆறுதல் படுத்தி கொண்டு இருக்கிறான்.

எப்படியோ முக நூல் வழியாக தனசேகரின் கண்களில் மலர்ந்தவள் தான் ஆர்த்தி . பார்த்ததும் காதல் இருவருக்கும் இவர்களின் கண்களில் நடனம் ஆட தொடங்கி உள்ளது...முக நூல் வழியாகவே

மேலும்

மன்சூர் அலி - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Jan-2017 12:21 pm

இன்றைய சூழ் நிலையில் தமிழர்களின் பண்பாடு,பாரம்பரியம் , கலாச்சாரம் சீர் அடைகிறதா? இல்லை .சீர் அழிகிறதா?

மன்சூர் அலி
சவூதி அரேபியா
ரியாத்

மேலும்

சீர் அழிந்து கொண்டு இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும் 19-Jan-2017 10:39 pm
மன்சூர் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2017 3:09 pm

புன்னகை மட்டும்
பூத்து குலுங்க

புத்தாடை உடன்
புன்னகை மலர

பொங்கியே வழிகிறது
பொங்கல் பானை

தை மகள் பிறந்து
விட்டாள்

தரணி செழிக்கவே
வந்து விட்டாள்

உண்மையாய் உழைத்த
உழவர்களை

உற்சாக படுத்திடவே
தமிழ் மகளாய் பிறந்துவிட்டாள்

பொங்கிய மகிந்திடுவோம்
பொங்கலோ பொங்கல் என்று..

மேலும்

மன்சூர் அலி - மன்சூர் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 12:00 pm

சூரியன் ஒன்று
சந்திரன் ஒன்று
பூமியும் ஒன்று...
வானம் ஒன்று...

பூமியில் வாழும்
நமக்கு எத்தனை சாதிகள்
என்று தெரியாத ஒன்று...

இன்று சாதிகள் மூலம்
அரசியல் நடத்தும்
கூட்டம் ஒன்று...

நம் மக்கள் மட்டும்
ஒரு நிமிடம் தனியாக
யோசிப்பது நன்று...

சாதிகள் இல்லை என்று
ஒரு மனதாய் குரல்
கொடுப்பது நமக்கு நன்று....

இன்றே ஒன்று படுவோம்
ஒன்றாய் நின்று கரம் பிடிப்போம்
மனித சாதி ஒன்றே என்று...

மேலும்

நன்றி 01-Nov-2016 12:59 pm
உண்மைதான்..இதை மனிதர்கள் உணர்ந்து கொண்டால் மண்ணில் என்றும் அவலமில்லை 01-Nov-2016 12:57 pm
மன்சூர் அலி - மன்சூர் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 11:43 am

உன்னை கட்டி பிடிக்கஆசை
உன்னை தொட்டு பார்க்கவும் ஆசை
உன்னை முத்தமிடவும் ஆசை...

எட்டாத தூரத்தில் நீ இருந்தால்
எப்படித்தான் பிடிப்பது உன்னை
எப்படியாவது வந்து விடு என்னருகில்...

நீயாக வந்து என் ஏக்கத்தை
தீர்த்து வை..ஏங்கிய தவிக்கும்
என் தாக்கத்தை தனித்து கொடு..

நிலவாய் நீ பிறந்து
என்னை நிம்மதி இல்லாமல்
நிலை குலைய செய்வது ஏன் ???

நீ வான மகள் என்றால்
நான் பூமியின் புதல்வன்
புரிந்து கொள் வான் நிலவே..

மேலும்

நன்றி 01-Nov-2016 12:58 pm
சிறப்பான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 12:56 pm
மன்சூர் அலி - மன்சூர் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2016 11:24 am

உன்னை சொல்லி எழுத
சொற்கள் இல்லை..

உன்னை கவிதை எழுத
வார்த்தை இல்லை..

உன்னை சிலை வடிக்க
கற்கள் இல்லை..

உன்னை கரம் பிடிக்க
தைரியம் இல்லை...

உன்னை உண்மையாய்
நேசிக்கிறேன்...

அதை சொல்லவும்
தெரியவில்லை
..
ஓ... இது தான் காதலா???
சொல்லிவிட்டேன் இப்போது..

காதலிக்கிறேன் உன்னை நான்
காதல் செய் என்னை நீ....

மேலும்

நன்று, வாழ்த்துக்கள் 02-Nov-2016 7:32 am
தவிப்புக்கள் நிறைந்தது காதல்.. 01-Nov-2016 7:04 am
நன்றி 31-Oct-2016 3:37 pm
அழகு வரி வாழ்த்துக்கள் 31-Oct-2016 3:35 pm
மன்சூர் அலி - மன்சூர் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2016 1:51 pm

புகுந்து விட்டாய்
என் பூஜையில் நீ

புயலாய் வருகிறேன்
பூஜிக்க நான்..

முதல் பூஜை என்பதால்
முணுங்கள் சத்தம் கேக்குதடி...

முடியும் வரை முனங்காதே
முடித்து விடுகிறேன் பூஜையை நான்..

தீர்த்தம் தெளிக்கப்பட்டது
தீர்ந்து போச்சு போ பெண்னே...

மேலும்

உணர்வுகளின் தொகுப்பில் காதல் 01-Nov-2016 7:20 am
பூஜையில் சிங்கம் நன்றி நண்பரே 31-Oct-2016 3:34 pm
பூஜையில் கரடியோ...அருமை வரி வாழ்த்துக்கள் 31-Oct-2016 3:25 pm
மன்சூர் அலி - மன்சூர் அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2015 10:37 am

சிறகடித்து பறந்து வந்து
என் சிந்தனையில் அமர்ந்தவளே
சீரும் சிறப்புமாய் என்னோடு
வாழ வந்தவளே..

உன் சிரிப்பை மட்டும்
சீதனமாய் கொண்டு வந்தவளே
என் சிறப்பான வாழ்க்கைக்கு
உறுதுணையாய் இருந்தவளே.

காதல் என்பதற்கு
அடையாள சின்னமாய்
என் மனதில் நீ
முத்திரை பதித்தவளே..

என் காலம் முடியும் வரை
நீ மட்டும் இருந்து விடு
என் வாழ்க்கைக்கு
அணையா விளக்காய் நீ.

மேலும்

மன்சூர் அலி - ஜெபீ ஜாக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2014 1:22 pm

இதயம் :

சாகும்வரை சந்தோசத்திலும்
சங்கடத்திலும் சண்டையைப்போட்டு
வெற்றியைமட்டும் ருசித்துகொண்டிருக்கும்
வீரன் - லப் டப் சத்தத்துடன் இதயம் ..!

மேலும்

நன்றிகள்பல .. சகோதரமே..! 22-Dec-2014 4:48 pm
அருமை 22-Dec-2014 3:33 pm
அருமை! 22-Dec-2014 2:59 pm
அருமை 22-Dec-2014 2:08 pm
மன்சூர் அலி - அன்புமலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2014 9:37 am

பொருளியப் பற்றால்
அருளியத்தைப் பற்றினால்

நித்திய ஆனந்தர்கள்

நிலவிலும் கொலுவீற்றிருக்கலாம்

மேலும்

நன்றி தோழமையே 23-Dec-2014 1:06 pm
நன்றி நண்பர் ஜின்னா அவர்களே 23-Dec-2014 1:06 pm
நன்றி தோழமையே 23-Dec-2014 1:05 pm
அருமை... 22-Dec-2014 10:01 pm
மன்சூர் அலி - மன்சூர் அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2014 10:21 am

நீ விதவை என்றும் தெரிந்தும்
வித்திட்டேன் உன் மனதில் நான்
நீ மீண்டும் விளைய வேண்டுமாய்
நீ மீண்டும் வாழ வேண்டுமாய்.

முளைத்து விடு என் மனதில் நீ.
படர்ந்து விடு என் உடலில் நீ
பதிந்து விடு என் மனதில் நீ
பரி மாறி கொள் உன் பாசத்தை நீ..

பார்போருக்கு உதாரணமாய்
பரிசம் போட்டு உன்னை நான்
பாரியாக நீ எனக்கு வர வேண்டும்
என் மனைவியாய். உன்னோடு

நான் வாழ உரிமை மட்டும்
நீ கொடுத்து உணமையாய்
வாழ்ந்து விடுவோம்.. வா
கண்ணே என்னோடு நீ..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (48)

இவர் பின்தொடர்பவர்கள் (48)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
navinlal

navinlal

Salem

இவரை பின்தொடர்பவர்கள் (48)

சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
ponniyinselvan

ponniyinselvan

Thanjavur

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே