என் அணையா விளக்கு நீ

சிறகடித்து பறந்து வந்து
என் சிந்தனையில் அமர்ந்தவளே
சீரும் சிறப்புமாய் என்னோடு
வாழ வந்தவளே..

உன் சிரிப்பை மட்டும்
சீதனமாய் கொண்டு வந்தவளே
என் சிறப்பான வாழ்க்கைக்கு
உறுதுணையாய் இருந்தவளே.

காதல் என்பதற்கு
அடையாள சின்னமாய்
என் மனதில் நீ
முத்திரை பதித்தவளே..

என் காலம் முடியும் வரை
நீ மட்டும் இருந்து விடு
என் வாழ்க்கைக்கு
அணையா விளக்காய் நீ.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (6-Jan-15, 10:37 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 102

மேலே