சாதிகள் இல்லையடி

சூரியன் ஒன்று
சந்திரன் ஒன்று
பூமியும் ஒன்று...
வானம் ஒன்று...

பூமியில் வாழும்
நமக்கு எத்தனை சாதிகள்
என்று தெரியாத ஒன்று...

இன்று சாதிகள் மூலம்
அரசியல் நடத்தும்
கூட்டம் ஒன்று...

நம் மக்கள் மட்டும்
ஒரு நிமிடம் தனியாக
யோசிப்பது நன்று...

சாதிகள் இல்லை என்று
ஒரு மனதாய் குரல்
கொடுப்பது நமக்கு நன்று....

இன்றே ஒன்று படுவோம்
ஒன்றாய் நின்று கரம் பிடிப்போம்
மனித சாதி ஒன்றே என்று...

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (1-Nov-16, 12:00 pm)
Tanglish : saathikal illaiyadi
பார்வை : 72

மேலே