ஜெபீ ஜாக் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெபீ ஜாக்
இடம்:  சென்னை , ஆழ்வார் திருநகர்
பிறந்த தேதி :  07-Dec-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Dec-2014
பார்த்தவர்கள்:  499
புள்ளி:  280

என்னைப் பற்றி...

விடியலை நோக்கி...

என் படைப்புகள்
ஜெபீ ஜாக் செய்திகள்
ஜெபீ ஜாக் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2018 3:31 pm

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ..!
____________________________________________

எழுந்திடு என்-நண்பா, நீ
எழுதிடு புதுவெண்பா
விதைத்திடும் முளையெனவே
வீரமாய் எழுந்திடு-நீ

பிறந்தது தைமாதம்
மறைந்திடும் பிணியாவும்
கதிரவனின் வரவாலே
காரிருளும் கலைந்தோடும்..!

தாங்கிவரும் பூமிக்கும்
தாயவளாம் தமிழுக்கும்
வானம்தரும் நீருக்கும்
வயல்தரும் நெல்லுக்கும்

தீர்க்கமாய் நன்றிசொல்லி
திருநாளை கொண்டாட
இயற்கையை அழைத்திடு -
இதயத்தின் அன்பாலே..!

அக்கரைக்கும் இக்கரைக்கும்
அதிகாரம் சொல்லாமல்
சாதிமதம் பேதமில்லாது
சமூகத்தை இணைத்துவரும்

முற்போக்கு சிந்தனையின்
முன்னேற்ற தலைமுற

மேலும்

ஜெபீ ஜாக் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2018 2:24 am

சிந்தையில் அவனும் - 2017
சிகரத்தில் இவனும் – 2018,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

2017, இன்பம் துன்பம்
இரண்டும் கலந்து
நன்மை தீமை
நாலும் தெரிந்து

அழகும் அறிவும்
அறிந்திட எனக்குள்
நண்பனாய் நீயும்
நடையாய் வந்தாய்..!

தவழும் என்னை
தாங்கியே நீயும்
ஏணியாய் இருந்து
ஏந்தியே வந்தாய்..!

ஒன்றா இரண்டா
ஓராயிரம் என்ற
அனுபவம் தந்து
அனுப்பிட வந்தாய்.!

வளரும் பிள்ளை
வாழ்வை அறிய
இருளாய் மறைய
ஒளியென வந்தாய்..!

உயிரது தரிக்க
உறவது துடிக்க
தேய்பிறை கடந்த
வளர்பிறை நீயே, 2018..!

மேலும்

ஜெபீ ஜாக் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2017 9:32 am

காலை வணக்கம்..!

மேலும்

ஜெபீ ஜாக் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2017 3:32 pm

முதல் காதல்..!

அரும்பென மீசை
குறுகுறு கண்கள்
கண்டதும் அவளை
கரும்பென அழைத்தது..!

உதறலில் ஏதோ
உணர்வினில் ஊற
கண்களால் கண்களில்
காயங்கள் ஆனது

உள்ளத்தில் பெண்
உருவமாய் வந்ததால்..!
உண்மையில் அவளால்
உறக்கமும் போனது

பாவையோ சென்றதும்
பருவமோ துடித்திட
பைத்தியம் ஆனது
பார்க்கவே மறுநாள்..!

எவனோ ஒருவன்
எழுதிய கோலம்
என்முன் அழகென
என்னமோ பண்ணுது..!

பனிவிழும் மலரில்
பளிச்சிடும் அழகில்
விருந்துகள் படைக்கும்
வயல்வெளி மலராய்

வாசணை தூவியே
வாடிக்கை ஆனாள்
வரவில்லை என்றால்
வலினான் ஆனேன்..!

அடித்திடும் இதயமோ
அவளையே தேடுது..!
கொலுசொ

மேலும்

ஜெபீ ஜாக் - ஜெபீ ஜாக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2017 10:37 am

கலைத்துறையில் நான் எழுதிய எனது 3 -வது (பாடல்: சில்லென்று சாரல் வீசுதே) பாடல் டிசம்பர் 18 -ம் தேதி, தனயன் என்ற படத்தின் முகவரியில் உதயமாகிறது..
தேடலை தொடரும் வண்ணம் எனது வரிகளின் காணிக்கை என் தோழர்களுக்கு..!

வரிகள் எல்லாம்
ஒலிகள் ஆகும்-
தருணம் எல்லாம்
தங்கம் அன்றோ..!

ஒலிகள் இன்று
ஒன்றாய் சேர்ந்து
தாளம் கலந்து
தாகம் தீர்த்திடும்

திருநாள் இன்று
தேடி வந்தது
மூடி மறைத்திட
முடியாது என்று..!

தரமென வரும்
தகுதிகள் என்பது
சிகரத்தை தொடும்
சிந்தனை மிக்கது..!

கம்பன் வீட்டு
கைத்தடி போல
கவிதை எழுத
கரிசனம் ஏனோ...!

தேடல் தொடரும்...!

அன்புடன்
-

மேலும்

அன்னை மதர் தெரேசா - முதல் பாடல் ஆல்பம் 2 பாடல்கள் கோவை மாநாடு - ஆறு பாடல்கள் மஹாராணி கோட்டை - சொல்லாத உறவென்றாலே நண்பன்தானடா - சினிமா நான் யார் - ராஜா நான்தானடா - சினிமா சகோ.. முப்பதுக்கும் மேல் எழுதியாகிவிட்டது.. வெளிவரும்போது தான் தெரியும்.. 14-Dec-2017 10:27 pm
நன்றி சகோ..! 14-Dec-2017 10:22 pm
நீங்கள் எழுதி வெளிவந்த மற்றைய இரண்டு பாடலையும் சொல்லுங்கள் கேட்டுப்பார்க்கிறேன் 14-Dec-2017 1:37 pm
ஆனந்தமான செய்தி காத்திருக்கிறேன் இன்னும் பல பாடல் படைத்து சிகரம் தொட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 14-Dec-2017 1:36 pm
ஜெபீ ஜாக் - ஜெபீ ஜாக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2017 10:17 pm

வெற்றியும் தோல்வியும் உன்கையில்..!
உன்னை பிடித்து
உயரம் கண்டேன்
உன்னால் தானே
வானில் பறந்தேன்
 
கரவொலி தன்னில்
கவலை மறந்தேன்
கதவினை திறந்த
காற்றென ஆனேன்..!
 
வாலாய் பின்னே
வந்தாய் நீயும்
வருவதை நானும்
வலியாய் எண்ணி
 
உளறல் தொடர்ந்து
உயரம் கரைந்தேன்
கருகிடும் மனதால்
சருகென போனேன்..!
 
சாதனை என்பது
சோதனை ஆனது
சரித்திரம் காண்பது
சாவினை வெல்வது..!

பொறுமை என்பது
பெருமை தருவது
புத்தியால் வருவது
புகழென வாழ்வது..!
 
ஆணவம் இல்லா
அன்பினால் தானே
மானிடம் உனக்கு
மகுடம் சேர்க்கும்
 
திமிரால் நீயும்
தறுதலை ஆனால்
மறுகணம் வாழ்வு

மேலும்

நன்றி சகோ..! 14-Dec-2017 12:48 pm
வாழ்க்கை யாவருக்கும் சுதந்திரமானது தான் ஆனால் அவர்களின் உள்ளமே அதையும் காலத்தோடு போராடி பெற்றுக்கொள்ள வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 12:29 pm
நன்றி சகோ..! 14-Dec-2017 9:59 am
கவிதையும் இனிமை கருத்தும் இனிமை ஆணவம் இல்லா அன்பினால் தானே மானிடம் உனக்கு மகுடம் சேர்க்கும் ----சிறப்பான கருத்து வாழ்த்துக்கள் ஜாக் ஆ ஃ ப் பொயட்ரி 14-Dec-2017 9:49 am
ஜெபீ ஜாக் - ஜெபீ ஜாக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2017 1:06 pm

காதல் துளிர்க்கையில்...!
---------------------------------------------------------
சூரியன் ஒளிபட
சோதனை நிகழ்ந்திட
தாமரை மலர்ந்ததம்மா ;
தியானமோ கலைந்ததம்மா..!
 
கண்களும் கவியென
காதலும் பிறந்திட-
நாடியோ நடுங்குதம்மா ;
நாணமோ தடுக்குத்தமா..!
 
கருமையின் அழகென
கார்குழல் கூந்தலில் -
மல்லிகை மணக்குதம்மா;
மயக்கமோ இனிக்குதம்மா..!
 
வில்லெனும் புருவமும்
விண்மீன் கண்களும் -
ஆசையை காட்டுதம்மா ;
ஆதிக்கம் செய்யுதம்மா .!
 
சிவந்திடும் கன்னமும்
சிருங்கார மேனியும் -
சிறுதாவணி மறந்தபடி;
சேலைக்கு துடிக்குதம்மா..!
 
கொடியிடை நடையதும்
கோபுரக் குழியதும் -
விடுகதை சொல்

மேலும்

அன்புக்கு வாழ்த்துக்கள்..! 13-Dec-2017 7:38 am
பார்வை உனது மந்திரமாய் பார்க்க வைத்தாய் தந்திரமாய் சுற்றியே திரிவோம் சுதந்திரமாய் சேர்ந்தே வாழ்வோம் நிரந்தரமாய். நல்ல படைப்பு திரு சகோ அவர்களே.. 12-Dec-2017 11:35 pm
நன்றி சகோ ..! 12-Dec-2017 8:47 pm
நன்றி சகோ ..! 12-Dec-2017 8:47 pm
ஜெபீ ஜாக் - மனிதன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 6:39 pm

ஜாதியை ஒழிக்க என்ன வழி?

மேலும்

அவனவன் தமிழ் கலாசாரம் என்கி றான். ஆனால் எது தமிழ் கலாசாரமென்று இதுவரை எவனும் நிர்ணயம் செய்யவில்லை. அவனவன் சொல்வதை அவனே ஏற்று நடப்பதில்லை. பழையனக் கழி ந்து பல காலம் ஆகிறது. 31-Dec-2019 10:57 am
உ ங் கள் கருத்தை ஏற்கன்வே MGR சொன்னதற்கு எல்லா கட்சியும் சேர் ந்து எகிறினார்கள் அது உமக்கு தெரியாது போலும் 31-Dec-2019 10:50 am
சொட்டு மருந்தால் எப்படி மொத்தப் போலியோவையும் ஒழிக்க முடியாதோ அதுபோலதான் ஜாதியும். ஜாதி அப்படியும் உயிர் வாழும். 31-Dec-2019 10:44 am
பெட்டி பெட்டியாக பணத்தை கொடுத்து சாதிய கட்சிகளை உருவாக்கிய, சாதிய கட்டமைப்புகளை உருவாக்கிய திராவிடக்கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். 18-Nov-2019 12:06 pm
ஜெபீ ஜாக் - ஜெபீ ஜாக் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 9:11 am

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.

சமீபத்தில் நடந்து முடிந்த "நான் யார்" திரைப்படத்தின் இசை மட்டும் trailer நிகழ்ச்சியின் படதொகுப்புகளின் படத் தொகுப்புகளை கீழ்வரும் இணையதளத்தில் காணலாம்..! உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள்..!

Dear Friends,

You can see the movie "NAAN YAAR" Photo Gallery in the following link.. Thanks for your valuable blessings & support..!

http://www.naalayacinema.com/naan-yaar-audio-launch-photos/

மேலும்

மிக்க நன்றி நண்பரே.. எல்லாம் உங்கள் நல்வாழ்த்தும் ஆசீர்வதமும்தான்..! 03-Mar-2015 10:36 am
மிக்க மகிழ்ச்சி நண்பரே.. வாழ்த்துக்கள். சிகரம் தொட மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 03-Mar-2015 9:28 am
ஜெபீ ஜாக் அளித்த படைப்பை (public) மகிழினி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Dec-2014 9:23 am

“செந்நீரும் கண்ணீரும் சிறுநீரு மொரு
தண்ணீரின் தயவின்றி வாழாது”

உணர்த்தும்பொருள்: மனிதன் உடல் உயிர்வாழ மூன்று நீரின் அவசியத்தை இங்கு காண்கிறோம்.


முதலாக((செந்நீர் எனும் குருதி) :
எலும்பும் தசையும் உடன் சேர்ந்து "உரு" ஆகி, அதில் உணர்வை பிரதிபலிக்கும் இரத்த ஓட்டம். “அய்யோ என்று அலறல் சத்தம்; பார்த்தவுடன் பரிதாபத்தை பற்றும் மனிதநேய மனசாட்சியின் நிசப்தமொழி இந்த குரு(தீ)தி.

இரண்டாவதாக கண்ணீர்:
மனித உயிர் உலகில் வாழும்வரை அவன் இன்பத் துன்பங்களை உணர்ச்சிகள் ததும்ப எடுத்துக்காட்டும் கண்ணீர். இதைதான் கவிஞர்கள் "கடல்நீரும் கண்ணீரும் வற்றாது, உன் உயிர் உள்ளவரை" என்று சொல்வார்கள்.

மூன

மேலும்

அர்த்தமுள்ள படைப்பு. மானிடருலகம் மலரட்டும் இனியேனும் வாழ்க வளமுடன் 27-Dec-2014 11:16 am
ஜெபீ ஜாக் - ஜெபீ ஜாக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 8:15 pm

பட்டமொன்றை படித்ததுபோல்
பத்தினியாய் வேஷமிட்டு
அடைகாக்கும் பருவமதை
அலைபாய விட்டுவிட்டாய்..!
 
விலைபேசும் மாதரைபோல்
வீதியிலே அலைந்துவிட்டு
பச்சிளம்குழந்தை யொன்றை
பட்டினியால் பழக்கிவிட்டாய்..!
 
தொட்டிலொன்று கட்டிவிட்டு
தூங்கச்சொல்லி நீநடிப்பாய்;
தட்டுவொன்றை ஏந்திக்கொண்டு -
தார்ரோட்டின் நடுவினிலே..!
 
எச்சிலுண்ணும் வாழ்க்கையிலே
உச்சிவெயில் தான்துவைக்க,
கருகிப்போன கருவாடாய் -
உருகிப்போகும் என்னுயிரும்...!
 
சொர்கமென்னும் படியேறி
சுகம்தேடி நீபோனாய் ,
சத்தைஎவனோ எடுத்தவிட -
சறுகா யென்னைஆக்கிவிட்டாய்..!
 
ஈரமில்லா உள்ளத்தால்
ஏங்குமாயிர

மேலும்

ஈரமில்லா உள்ளத்தால் ஏங்குமாயிர உள்ளங்களை எட்டிப்பார்க்கும் மனதைவிட எடுத்துவளர்ப்போர் தெய்வங்கள்..! சொல்நயம், கவிநயம் அருமையோ அருமை நட்பே..! அருமையான கருத்து :) 27-Dec-2014 2:23 pm
நன்றி நண்பரே..! 26-Dec-2014 9:21 pm
அஹா .. என்ன ஒரு கவி நடை .. வாழ்த்துக்கள் ... 26-Dec-2014 8:59 pm
ஜெபீ ஜாக் - ஜெபீ ஜாக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 10:52 am

பாரதிக்கு..

விழியில் வீரமும்
வரியில் வாளையும்
வரிந்து கட்டியவன்
விளைந்த பொன்னாள்..

தலையில் பாகையும்
தமிழின் பாலையும்
திலகம் வைத்திவன்
தீமை யழித்தவன்

வீறு நடையினில்
வேகம் இருந்தும்
விவேகம் விதைத்து
வேறாய் இருந்தவன்.

பெண்ணினப் புரட்சி
பெருமைகள் சேர
பேராய் இருந்தவன்
பாரதி யன்றோ ..!

அஞ்சிய தில்லை
அவனியில் யார்க்கும்
கொஞ்சிடும் குணமோ
குழந்தையை போலே..

மீசை வைத்தவன்
ஆசை துறந்தவன்
கனவுகள் மெய்ப்பட
கவிதை வளர்த்தவன்..!

புரட்சிகள் செய்து
புதுமைகள் கண்டான்
போர்க்கள மன்னன்
புரட்சிக் கவிஞன்..!

அக்கினிப் பார்வை
அவனது கூர்மை
தெளிவெனும் மதியால்
திறமையில் நேர்மை..

மேலும்

பாரதி இதை கேட்டு இருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பான் நான் யஸ் இம் யஸ் அனுப்புகிறேன் விண்ணுலகிற்கு 27-Dec-2014 10:05 pm
கவி நடை அழகு .. வாழ்த்துக்கள் ... 26-Dec-2014 1:34 pm
அருமை! 26-Dec-2014 12:39 pm
அருமை.. 26-Dec-2014 12:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (167)

இவர் பின்தொடர்பவர்கள் (167)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (167)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே