முதல் பார்வையில் காதல்
காதல் துளிர்க்கையில்...!
---------------------------------------------------------
சூரியன் ஒளிபட
சோதனை நிகழ்ந்திட
தாமரை மலர்ந்ததம்மா ;
தியானமோ கலைந்ததம்மா..!
கண்களும் கவியென
காதலும் பிறந்திட-
நாடியோ நடுங்குதம்மா ;
நாணமோ தடுக்குத்தமா..!
கருமையின் அழகென
கார்குழல் கூந்தலில் -
மல்லிகை மணக்குதம்மா;
மயக்கமோ இனிக்குதம்மா..!
வில்லெனும் புருவமும்
விண்மீன் கண்களும் -
ஆசையை காட்டுதம்மா ;
ஆதிக்கம் செய்யுதம்மா .!
சிவந்திடும் கன்னமும்
சிருங்கார மேனியும் -
சிறுதாவணி மறந்தபடி;
சேலைக்கு துடிக்குதம்மா..!
கொடியிடை நடையதும்
கோபுரக் குழியதும் -
விடுகதை சொல்லுதம்மா ;
விரதமோ கெஞ்சுதம்மா..!
ஒருகண பார்வையில்
உலகத்தை மறந்திட -
மந்திரம் செய்துவிட்டாய்;
முழுவியந்திரம் ஆக்கிவிட்டாய்..!
வளர்ந்திடும் வயதில்
வாலிபம் என்பதை -
உன்னால் தெரிந்துகொண்டேன் ;
வந்தது காதலென்றேன்..! – என்
உலகே நீயென்றேன்…!
என்றும் காதல் வாழும் அன்புடன்
- ஜாக் ஜெ ஜீ

