தொட்டில் பிச்சை - துடிக்கும் இதயம்

பட்டமொன்றை படித்ததுபோல்
பத்தினியாய் வேஷமிட்டு
அடைகாக்கும் பருவமதை
அலைபாய விட்டுவிட்டாய்..!
விலைபேசும் மாதரைபோல்
வீதியிலே அலைந்துவிட்டு
பச்சிளம்குழந்தை யொன்றை
பட்டினியால் பழக்கிவிட்டாய்..!
தொட்டிலொன்று கட்டிவிட்டு
தூங்கச்சொல்லி நீநடிப்பாய்;
தட்டுவொன்றை ஏந்திக்கொண்டு -
தார்ரோட்டின் நடுவினிலே..!
எச்சிலுண்ணும் வாழ்க்கையிலே
உச்சிவெயில் தான்துவைக்க,
கருகிப்போன கருவாடாய் -
உருகிப்போகும் என்னுயிரும்...!
சொர்கமென்னும் படியேறி
சுகம்தேடி நீபோனாய் ,
சத்தைஎவனோ எடுத்தவிட -
சறுகா யென்னைஆக்கிவிட்டாய்..!
ஈரமில்லா உள்ளத்தால்
ஏங்குமாயிர உள்ளங்களை
எட்டிப்பார்க்கும் மனதைவிட
எடுத்துவளர்ப்போர் தெய்வங்கள்..!