எங்கள் வாழ்க்கை

கணிணியோடு கணிணியாகி
கரைகின்ற எங்கள் வாழ்வில்
காதலுக்கு ஏது இடம் .?
பணம் மட்டும் மூச்சாகி
பாசம் வெறும் பேச்சாகி
சுழல்கின்ற எமக்கேது நேசம் காட்டும்
ஒரு ஜீவன் .?
இயந்திரங்களோடு இயங்கியே
இதயமும் இரும்பாகி
ஏக்கங்களை இறுக்கிக்கொள்கிறது
இதயத்தினுள் .
உச்சத்தில் இருப்பதாய் ஊரில் சொல்லி
பெருமை படும்
உறவுகளின் முன்னால்
உதட்டளவில் புன்னகைத்துவிட்டு
உள்ளத்தால் உள்ளுக்குள் அழும்
ஊமை நாடகம்
அனுதினமும் அரங்கேறுகின்றது
அர்த்தமில்லா எங்கள் வாழ்வில் .