அண்ணனுக்கு

கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.

கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!

நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!

சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!

இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!

உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!

உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!

எதுகை மோனை சீர் என
எதார்த்தமாய்க் காதல் வெண்பாவால்
கிறுக்குப்பிடிக்க வைத்தவன் நீ!

நீ புகைக்கும்
சிகரெட்டின் சீக்ரெட் சொல்லி
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவன் நீ!

உன் உயிர்ச்சொல்லால் எங்களை
உயிர்பெறச் செய்தவன் நீ!

கவிதையெனக் கற்பனையில்
கண்டபடிக் கிறுக்கினாலும்
புள்ளிராஜாவாய் வலம் வந்து-இத்
தளத்தினைக் கலக்கும்
நாகூர் ராஜன் நீ!

அண்ணனாய் உன்னைப்பெற்றதினால் இத்தங்கையின்
உள்ளம் மகிழுது...

உளம் நிறை அன்போடு
அகம் மகிழ வாழ்த்துகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

எழுதியவர் : பபியோலா (26-Dec-14, 12:01 am)
Tanglish : annanukku
பார்வை : 1064

மேலே