3 -வது முறை எனது வரிகளின் உதயம்

கலைத்துறையில் நான் எழுதிய எனது 3 -வது (பாடல்: சில்லென்று சாரல் வீசுதே) பாடல் டிசம்பர் 18 -ம் தேதி, தனயன் என்ற படத்தின் முகவரியில் உதயமாகிறது..
தேடலை தொடரும் வண்ணம் எனது வரிகளின் காணிக்கை என் தோழர்களுக்கு..!

வரிகள் எல்லாம்
ஒலிகள் ஆகும்-
தருணம் எல்லாம்
தங்கம் அன்றோ..!

ஒலிகள் இன்று
ஒன்றாய் சேர்ந்து
தாளம் கலந்து
தாகம் தீர்த்திடும்

திருநாள் இன்று
தேடி வந்தது
மூடி மறைத்திட
முடியாது என்று..!

தரமென வரும்
தகுதிகள் என்பது
சிகரத்தை தொடும்
சிந்தனை மிக்கது..!

கம்பன் வீட்டு
கைத்தடி போல
கவிதை எழுத
கரிசனம் ஏனோ...!

தேடல் தொடரும்...!

அன்புடன்
-ஜாக் ஜெ ஜீ

எழுதியவர் : ஜாக் ஜெ ஜீ (14-Dec-17, 10:37 am)
பார்வை : 137

மேலே