வெற்றியும் தோல்வியும் உன்கையில்

வெற்றியும் தோல்வியும் உன்கையில்..!
உன்னை பிடித்து
உயரம் கண்டேன்
உன்னால் தானே
வானில் பறந்தேன்
 
கரவொலி தன்னில்
கவலை மறந்தேன்
கதவினை திறந்த
காற்றென ஆனேன்..!
 
வாலாய் பின்னே
வந்தாய் நீயும்
வருவதை நானும்
வலியாய் எண்ணி
 
உளறல் தொடர்ந்து
உயரம் கரைந்தேன்
கருகிடும் மனதால்
சருகென போனேன்..!
 
சாதனை என்பது
சோதனை ஆனது
சரித்திரம் காண்பது
சாவினை வெல்வது..!

பொறுமை என்பது
பெருமை தருவது
புத்தியால் வருவது
புகழென வாழ்வது..!
 
ஆணவம் இல்லா
அன்பினால் தானே
மானிடம் உனக்கு
மகுடம் சேர்க்கும்
 
திமிரால் நீயும்
தறுதலை ஆனால்
மறுகணம் வாழ்வு
மடிந்து போகும்..!
 
மறவாய் மனமே..
மண்ணில் நீயும்
உளறாதிரு நீ ..!
உயரம் செல்வாய் ..!
 
நல்ல சிந்தனை ...! நல்வரவு..! வாழ்வின் உயர்வு..!

அன்புடன் | - ஜாக் ஜெ ஜீ

எழுதியவர் : ஜாக் ஜெ ஜீ (13-Dec-17, 10:17 pm)
பார்வை : 173

மேலே