அருள் ஜீவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருள் ஜீவா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-Aug-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Aug-2019
பார்த்தவர்கள்:  148
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் ஒரு மென்பொருள் பொறியாளர்
~~~
தனித்தமிழ் பேசுவோம் எழுதுவோம் வாசிப்போம்....! தனித்தமிழ் வளர்ப்போம்...!
வாழிய செந்தமிழ்...! வாழ்க நற்றமிழர்...!

என் படைப்புகள்
அருள் ஜீவா செய்திகள்
அருள் ஜீவா - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2020 7:15 am

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு நாம் படித்து அறிந்த, கேட்டுத் தெரிந்து கொண்ட , நமது நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சரித்திர உண்மைகள் , தியாகம் செய்த தலைவர்கள், அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றை,


சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் இன்று வரை நாடு முழுவதிலும் அரங்கேறிய நிகழ்வுகள், நடைபெற்ற மாற்றங்கள் வரை திருத்தி எழுதப்பட்ட இந்திய வரலாறாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் கவலையும் என்னைப் போன்றவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது அடுத்த தலைமுறைக்கு குழப்பத்தையும் தவறான புரிதலையும் உண்டாக்கும் என்பது எனது கணிப்பு. அந்த அளவுக்கு நாம் இன்று தவறான பாதையில் பயணிக்கிறோம் என்பது வருத்தமாக உள்ளது.

ஜனநாயகத்தில் நாணயம் இல்லை. இதனால் சமுதாயம் சீரழிகிறது என்பதை நினைத்து பார்க்கும் போது கவலை ஆட்கொள்கிறது.தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி அதனால் அமைதியும் சீர்குலைந்து ஒற்றுமை உணர்வும் குறைந்து ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் வெவ்வேறு மொழி பேசுபவரின் பண்பாடு , கலாசசாரம் , நடைமுறை வாழ்க்கை , கோட்பாடு அனைத்தும் மாறிவிடுமோ என்ற எண்ணம் மேலோங்குகிறது .


பழனி குமார்
03.03.2020

மேலும்

நன்றி அண்ணா... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 09-Mar-2020 4:27 pm
உண்மை அதைத்தான் நானும் கூறுகிறேன் நன்றி ஜீவா 05-Mar-2020 9:26 pm
நல்ல பதிவு.. இந்தியாவின் பன்முக தன்மையை நேசிக்கின்ற தலைமைகள் இங்கு இல்லை. இந்தியா ஒரு பாதுகாப்பற்ற நாடு என்று உணர வேண்டிய நிலையில் உள்ளோம். 05-Mar-2020 4:55 pm
அருள் ஜீவா - எண்ணம் (public)
22-Jan-2020 10:10 am

~~~~~~~~~~~~~~~~~
Sometimes
two wheeler
becomes unsafe...!
Please
must wear helmet
even small distance...!
~~~~~~~~~~~~~~~~~~

மேலும்

அருள் ஜீவா - Kavino அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2019 6:07 pm

தனிமை 

மேலும்

புத்தகம் வாசியுங்கள் 20-Dec-2019 12:48 pm
அருள் ஜீவா - எண்ணம் (public)
20-Dec-2019 12:44 pm

ஓட்டுக்கு

பணம் பெறுவது பாவம்..!
வாங்கிய பணத்திற்கு 
மனசாட்சியுடன் நடப்பது பெரும் சோகம்..!

மேலும்

அருள் ஜீவா - எண்ணம் (public)
20-Dec-2019 12:41 pm

நம்  வாழ்வியல் முறையை

நிர்ணயம் செய்யும்... 
அரசியல் பேசுவோம் 
அது நம் அடிப்படை கடமை...!

மேலும்

அருள் ஜீவா - எண்ணம் (public)
20-Dec-2019 12:39 pm

மாற்றங்களை விரும்புவோம்...

விரும்பினால் வளர்ச்சி...
இல்லையேல் தளர்ச்சி...

மேலும்

அருள் ஜீவா - Priya Pandi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2019 1:34 pm

என்னால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை எப்போதும் குழப்பமான மனநிலையிலே இருக்கிறேன் .
. என் மன நிலையை தெளிவு படுத்த யாரிடமாவது கேக்கும் பொது அவர்கள் கூறும் பதில் மேலும் என்னை குழப்பமடைய வைக்கிறது .இதற்கு தீர்வு தான் என்ன

மேலும்

ஒரு செயலை பற்றி நான்கு பேரிடம் விசாரிக்கலாம், பிறகு ஒரு முடிவுக்கு வந்து நம் எண்ணப்படி செயல்பட வேண்டும். எதையும் யோசித்துக்கொண்டே இருக்கக்கூடாது. செயலில் இறங்க வேண்டும். சரியாய் தவறா என்பது பின்னாளில் புரிய வரும். 04-Dec-2019 4:11 pm
அன்பு தோழி, உங்களின் மனநிலை எனக்கும் பல சமயங்களில் இருந்து உள்ளது... இதற்கான தீர்வு உங்களை நீங்களே ஆராய்வதில் மூலம் கிடைக்கும்... தன்னிலை அறிதலை விட சிறந்த தீர்வு ஏதும் இல்லை... உங்களின் மனதின் குணாதிசியங்களை பட்டியலிட்டு ஆராயுங்கள்... தீர்வு நிச்சயம் கிட்டும்... நம் மனதின் குழப்பத்தை நம்மால் மட்டுமே தீர்க்க இயலும்... இது எனது அனுபவத்தின் மூலம் நான் கண்ட தீர்வு... உங்கள் குழப்பங்கள் தீர பிராத்திக்கிறேன்... 27-Nov-2019 12:11 pm
வணக்கம் ப்ரியா பாண்டி. நான் எனது ஆவாஸ் (ஆவாஸ் - ஆஸ்ட்ரா வாழ்வியல் ஜென்ட்டர் - AUVAAZ - Auztra Vaazhviyal Zenter) வழியாக மாணவ மாணவியருக்கும் இளைஞருக்கும் வாழ்வியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். உங்கள் கேள்வி - எப்போதும் குழப்பமான மன நிலையில் இருக்கும் நான் என் மனநிலையைத் தெளிவாக்கிக் கொள்ள என்ன வழி? ஒரு பிரச்சினை அல்லது முடிவெடுக்க வேண்டிய வேலை நமக்கு வரும்போது இதைப்போலக் குழப்பமான மனநிலை ஏற்படும். அதுவும் நமது முடிவு பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனும் போதும் தவறான் முடிவாகப் போய் விடுமோ எனும் சந்தேகம் ஏற்படும் போதும் இது அதிகமாகி நமது வேலையைப் பாதிக்கும். இதற்கு முக்கியமாக காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமான காரணம் நம்மிகம் அந்தப் பிரச்சினை அல்லது வேலை பற்றிய அனைத்துத் தகவல்களும் தேவையாக அளவில் நம்மிடம் இல்லாததே ஆகும். இன்னொரு காரணம் அந்தப் பிரச்சினை அல்லது வேலையை முடிக்க ஒன்றிற்கு மேற்பட்ட வழிகள் இருப்பது என்பதாகும். மூன்றாகது காரணம், அந்தப் பிரச்சினை அல்லது வேலையைப் பற்றிய முன் அநுபவம் இல்லாதது ஆகும். இதற்கு மன் நல ஆலோசனைகளோ மருத்துவமோ தேவையில்லை. வர்ம யோகப் பயிற்சிகளில் நினைவாற்றலைப் பன்ம்டங்கு கூட்டும் பயிற்சிகளும் தகவல்களை ஒருங்கிணைத்துக் குறியீடுகள் மூலம் மனதில் நிரந்தரமாகப் பதிக்கும் பயிற்சிகளும் உள்ளன. எண்ணற்ற அளவில் தகவல்களை நம் மனதில் என்றென்றும் எந்த வயதிலும் துளிக் கூட மங்காமல் நிலைக்கச் செய்ய இவை பேருதவி புரிகின்றன. உங்களது கேள்வி இன்னும் கொஞ்சம் விரிவாகவும் தெளிவாகவும் தெரிய வேண்டும். உங்களுக்கு இந்த ஆலோசனைகள் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்றாய் மின்னஞ்சல் வழியாகவும் இந்தப் பக்கத்திலேயே வேண்டும் என்றால் தெளிவாக விரிகாக் உங்கள் குழப்ப மனநிலையைப் பற்றிய தகவல்களுடனும் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். எந்தப் பிரச்சினைக்கும் அறுகோண நோக்கின் வழியே தெளிவான் உறுதியாக முடிவை எளிதாக எட்டலாம். மிக்க நன்றி!! வணக்கம்! 24-Nov-2019 11:14 pm
Confused foru 23-Nov-2019 11:14 pm
அருள் ஜீவா - மனிதன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 6:39 pm

ஜாதியை ஒழிக்க என்ன வழி?

மேலும்

அவனவன் தமிழ் கலாசாரம் என்கி றான். ஆனால் எது தமிழ் கலாசாரமென்று இதுவரை எவனும் நிர்ணயம் செய்யவில்லை. அவனவன் சொல்வதை அவனே ஏற்று நடப்பதில்லை. பழையனக் கழி ந்து பல காலம் ஆகிறது. 31-Dec-2019 10:57 am
உ ங் கள் கருத்தை ஏற்கன்வே MGR சொன்னதற்கு எல்லா கட்சியும் சேர் ந்து எகிறினார்கள் அது உமக்கு தெரியாது போலும் 31-Dec-2019 10:50 am
சொட்டு மருந்தால் எப்படி மொத்தப் போலியோவையும் ஒழிக்க முடியாதோ அதுபோலதான் ஜாதியும். ஜாதி அப்படியும் உயிர் வாழும். 31-Dec-2019 10:44 am
பெட்டி பெட்டியாக பணத்தை கொடுத்து சாதிய கட்சிகளை உருவாக்கிய, சாதிய கட்டமைப்புகளை உருவாக்கிய திராவிடக்கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். 18-Nov-2019 12:06 pm
அருள் ஜீவா - சி எம் ஜேசு பிரகாஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2019 1:04 pm

பொருளை சார்ந்து வாழும் உலகில் 

அருளை காண நினைப்பது அர்த்தமற்றதாகிறது 

மேலும்

அருள் ஜீவா - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2019 8:20 pm


தலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுகையில் , ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் குறைகிறது என்று ஒரு ஆய்வுகூறுவதாக ஒரு தகவல் . அது உண்மையா பொய்யா என்று தெரியாது . ஆனால் நடைமுறை வாழ்வில் நான் கண்டது , காண்பது அந்த தகவலை உறுதிப்படுத்துகிறது .



ஏனெனில் , இறப்பு என்பது சிலருக்கு சீக்கிரம் நிகழ்கிறது . இளவயதில் அகால மரணம் அடைவோர் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே வருகிறது . அது எந்த விதத்தில் என்பதில் மாறுபாடு இருக்கலாம் . ஆனால் உண்மை என்று நமக்கு சொல்லாமல் சொல்கிறது அவ்வாறு நடப்பவை. 


அந்த காலத்து மனிதர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள் . ஆனால் இன்று இளமையிலேயே தீராத வியாதிகள் பற்றிக்கொள்வதும் அல்லது விபத்துகள் மூலமாகவோ உயிரிழப்பு நேரிடுவதும் அன்றாட செய்தியாகிவிட்டது . வருத்தமான ஒன்றுதான் . இதனால் அல்லாடும் குடும்பங்கள் அதிகம் . பரிதாபத்திற்குரிய நிலை உருவாகிறது . 


ஆகவே இளைய தலைமுறைக்கு ஓர் வேண்டுகோள்.  உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் , சத்தான உணவை எடுத்துக் கொள்வதும் , சிறிது உடற்பயிற்சி செய்து வலிவான உடலுக்கு  வழி காணுங்கள் . நமது இலட்சியங்கள் வெற்றிபெறவும் , உள்ளத்தில் உத்வேகம் பிறக்கவும் , சிந்தனைகள் சீராகவும் வழிவகுக்கும். வாழ்த்துகள் !


பழனி குமார் 
11.10.2019 
               

மேலும்

அருள் ஜீவா - மோகன பிரியங்கா சி அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2019 2:44 am

பெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன ??
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து???

மேலும்

media 25-Aug-2019 6:12 pm
ஊடகம் 25-Aug-2019 11:01 am
ஊடகம் 24-Aug-2019 4:58 pm
பெண்கள் உடுத்தும் உடைகள். உடலை ஒட்டி, இறுக்கமாக ஆடை அணிவதை பெண்கள் நிறுத்திக்கொண்டாள், சற்று தளர்வான உடைகளை அணிந்தால், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். 23-Aug-2019 1:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே