ரூபி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரூபி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Mar-2019
பார்த்தவர்கள்:  258
புள்ளி:  82

என்னைப் பற்றி...

காதல் கிறுக்கல்கள்

என் படைப்புகள்
ரூபி செய்திகள்
ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2019 1:59 pm

பிறரை மகிழ்விக்க
தியாகம் செய்தும் பலனில்லை..

உயிரை கொடுத்து
காதல் செய்தும் பலனில்லை...

விசுவாசம் முழுதும்
காட்டியும் ஒரு பலனில்லை...

உண்மை உணர்வுகள்
பல பகிர்ந்தும் பலனில்லை...

மனங்களை மதித்து
நடந்தும் ஒரு பலனில்லை...

உலகில் எந்தன்
உயிருக்கு இனி பலனில்லை...

மேலும்

ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2019 9:36 pm

உடலை நிறைத்த
அவன் அடிகள்...

உள்ளம் துளைத்த
அவன் சொற்கள்...

கன்னம் பழுக்க
அவன் அறைகள்...

இதயம் உடைத்த
அவன் வாக்குகள்...

உயிர் உருக்கும்
அவன் நினைவுகள்...

எது கொடுக்கும்
வலி பெரிது...?

என்று நான்
என்னும் வேளையில்...

பிரிவின் வலியே
என்றும் பெரிதென...

காட்டிச் சென்ற அவன்
என் காதல் கணவன்...

மேலும்

ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2019 10:36 pm

உன் விரல்கள் நடுவிலே
என் விரல்களும்...

உன் சுவாசக் காற்றிலே
என் கூந்தலும்...

உன் மார்பின் மேலே
என் நெற்றியும்...

உன் இதய துடிப்பில்
என் தூக்கமும்...

சாகும் வரை
எனக்கு வேண்டும்

என்ற எண்ணங்கள்
பகல் கனவாய்

போன காரணம்
என்ன சொல்லாயோ?

மேலும்

ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2019 9:35 pm

உன்மேல் நான்
கொண்ட காதலை...

உன்னை தவிர
உலகில் எல்லாரும்,

உணர்ந்து பிறரிடம்
கூறும் பொழுது,

கனம் கூடுகிறது
எந்தன் இதயத்தில்...

மேலும்

ரூபி - ரூபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2019 9:09 pm

ஒட்டி வைக்க
முயன்ற எல்லோரும்
தோற்று போயினர்...

விரிசல் பலவற்றை
எந்தன் இதயத்துள்
பார்த்த பின்னே ...

மேலும்

நன்றி 10-Jun-2019 10:25 pm
அருமை 10-Jun-2019 12:10 pm
ரூபி - ரூபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2019 10:34 pm

பாசம் தேடும் எனது
தொட்டில் பழக்கம்...
ஓயாது தொடருமோ
சுடுகாடு மட்டும்...

மேலும்

நன்றி ... 02-May-2019 9:30 pm
உண்மை... நன்றி... 02-May-2019 9:30 pm
பாசம் தேடுவோர் பின்னாலே ஏமாற்றமும் தொடரும் என்பது நான் அறிந்த ஒன்று. கவிதை அழகு. 02-May-2019 2:40 pm
மிகவும் அற்புதமான கவிதை. 02-May-2019 9:43 am
ரூபி - ரூபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2019 9:39 pm

தன் கையே தனக்கு உதவி
என்று யாரையும் நம்பாதே
என்றது எனது அறிவு...

உன்னுடன் இருப்பேன் எப்போதும்
என்ற ஆறுதல் துணைக்கு
ஏங்கியது எனது மனம்...

மேலும்

நன்றி தோழி 02-May-2019 9:29 pm
மனதுக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக உங்கள் கவிதையில் கூறியுள்ளீர்கள் . மிகச் சிறப்பு. 02-May-2019 9:47 am
ரூபி - ரூபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2019 6:05 pm

கள்ளி செடியின் முட்களும்
தோற்றுப் போனது...
நெஞ்சை துளைத்துச் சென்ற
சொற்களின் முன்னே...

மேலும்

நன்றி 01-May-2019 6:42 pm
அருமை 01-May-2019 4:50 pm
ரூபி அளித்த படைப்பை (public) Hari Ashwin மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-Mar-2019 11:38 am

காதல் அகராதி
நான் எழுதி தந்தேன்...
அர்த்தம் புரிந்தும்
நீ விலகி போனாய்...
இதயம் கிழித்தே
உன்னுருவம் காட்டினேன்...
கண்கள் இருந்தும்
நீ பார்க்க மறுத்தாய்...
உன்னை நினைத்தே
என் உலகம் மறந்தேன்...
எல்லாம் தெரிந்தும்
நீ பிரிந்து சென்றாய்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

Hari Ashwin

Hari Ashwin

ஊத்துக்கோட்டை,திருவள்ளூர
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே