எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக்...


தலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுகையில் , ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் குறைகிறது என்று ஒரு ஆய்வுகூறுவதாக ஒரு தகவல் . அது உண்மையா பொய்யா என்று தெரியாது . ஆனால் நடைமுறை வாழ்வில் நான் கண்டது , காண்பது அந்த தகவலை உறுதிப்படுத்துகிறது .



ஏனெனில் , இறப்பு என்பது சிலருக்கு சீக்கிரம் நிகழ்கிறது . இளவயதில் அகால மரணம் அடைவோர் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே வருகிறது . அது எந்த விதத்தில் என்பதில் மாறுபாடு இருக்கலாம் . ஆனால் உண்மை என்று நமக்கு சொல்லாமல் சொல்கிறது அவ்வாறு நடப்பவை. 


அந்த காலத்து மனிதர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள் . ஆனால் இன்று இளமையிலேயே தீராத வியாதிகள் பற்றிக்கொள்வதும் அல்லது விபத்துகள் மூலமாகவோ உயிரிழப்பு நேரிடுவதும் அன்றாட செய்தியாகிவிட்டது . வருத்தமான ஒன்றுதான் . இதனால் அல்லாடும் குடும்பங்கள் அதிகம் . பரிதாபத்திற்குரிய நிலை உருவாகிறது . 


ஆகவே இளைய தலைமுறைக்கு ஓர் வேண்டுகோள்.  உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் , சத்தான உணவை எடுத்துக் கொள்வதும் , சிறிது உடற்பயிற்சி செய்து வலிவான உடலுக்கு  வழி காணுங்கள் . நமது இலட்சியங்கள் வெற்றிபெறவும் , உள்ளத்தில் உத்வேகம் பிறக்கவும் , சிந்தனைகள் சீராகவும் வழிவகுக்கும். வாழ்த்துகள் !


பழனி குமார் 
11.10.2019 
               

நாள் : 11-Oct-19, 8:20 pm

மேலே